மாயன் (திரைப்படம்)
மாயன் (Maayan) 2001 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நாசர்,ரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் 2001 செப்டம்பர் 14 அன்று படம் திரைக்கு வந்தது.[1][2][3]
மாயன் | |
---|---|
இயக்கம் | நாசர் |
தயாரிப்பு | கமீலா நாசர் |
கதை | சுந்தர திருமால் |
இசை | தேவா |
நடிப்பு | நாசர் ரோஜா பாலாசிங் தலைவாசல் விஜய் தியாகு வடிவேலு கே. ஆர். வத்சலா ரஞ்சிதா வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | பி. எஸ். தரன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 14, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
மாயன் கிராமத்தில் வசிக்கும் இளைஞன். அங்கு உள்ள நில உரிமையாளர்கள் அவர்கள் நிலங்களில் வேலை செய்யும் ஏழைகளைச் சுரண்டுகிறார்கள். அதை எதிர்க்கிறார் மாயன். இதனால் நில உரிமையாளர்கள் அவருக்குப் பெருந்துன்பம் விளைவிக்கறார்கள். மாயனின் காதலி கொல்லப்படுகிறாள். கோபத்தில் பொங்கும் மாயன் அவர்களை அழிக்கப் புறப்படுகிறார். இறுதியில் அந்த கிராமத்தில் மாற்றம் வந்ததா, ஏழைகளின் வாழ்வு விடிந்ததா என்று செல்லும் கதை.
மேற்கோள்கள்
- ↑ Rangarajan, Malathi (21 September 2001). "Film Review: Maayan" இம் மூலத்தில் இருந்து 9 November 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071109132143/http://www.hindu.com/2001/09/21/stories/09210222.htm.
- ↑
- ↑