மானூர் சுவாமிகள்
மானூர் சுவாமிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு அருகில் உள்ள மானூர் கிராமத்தில் வாழ்ந்துள்ள சித்தராவார்.[1] இவர் நிர்வாணமாக இருப்பார் என்றும் பக்தர்களுக்கு போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு காட்சியளிப்பாரென்றும் சொல்லப்படுகிறது.
அப்பகுதி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். இவர் கண்ட சித்து படித்தவர்.[2] இவரது ஜீவசமாதி பெருவுடையார் கோவிலுக்கு செல்லும் வழிக்கு முன்பும் கோதைமங்கலம் அருகில் அமைந்துள்ளது.
மகா சமாதி
1945 நவம்பர் 4ல் மானூர் சாமி மகா சமாதியடைந்தார். தமிழ் கணக்கில் பார்திப வருடம் ஐப்பசி 19.[1] இவரது சமாதி கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் மகா சமாதி என்று அழைக்கப்படுகிறது.
இவையன்றி பல இடங்களில் இவர் சமாதிகள் உள்ளதாகவும் நம்புகின்றனர்.
குருபூசை
இவரது பிறந்த நட்சத்திரம் அன்றும் அம்மாவாசை, பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகிறது. இவரது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி. குருநாதருடைய ஜீவசமாதியும் அவ்வூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 [ http://temple.dinamalar.com/news_detail.php?id=38933 மானூர் சாமிகள் தினமலர் கோயில்கள் ]
- ↑ http://www.dinamani.com/edition_madurai/article1192049.ece மானூர் சாமி குருபூசை தினகரன்