மானுடம்‌ (இதழ்)

மானுடம்‌ என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்தது.

வரலாறு

மானுடம் இதழானது தமிழ்நாட்டின் திருச்சிராபள்ளியில் 1979இல் துவக்கப்பட்டு மாதம் இருமுறை வெளியானது. இது கனமான விஷயங்களைத் தருவதில் அக்கறை கொண்ட இதழாக இருந்தது. இந்த இதழுக்கு ஜி. விஜயகுமார் (ஜீவி) என்பவர் ஆசிரியராக இருந்தார். ஜி. விஜயகுமாரும் இதில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியுள்ளார்.

இதன் இரண்டாவது இதழில் திரைப்பட படைப்பாளியான இங்மர் பெர்க்மன் எழுதிய ஒவ்வொரு படமும் எனது இறுதிப் படம் என்ற கட்டுரையின் தமிழாக்கம் வெளியானது. மூன்றாவது இதழில் எஸ். ஆல்பர்ட் எழுதிய 'புதுக் கவிதையின் பாடு பொருள்' என்ற ஆய்வுக் கட்டுரை இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தததாக வெளியனது.

மானுடம் படைப்பிலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன திரைப்படம், ஓவியம் பற்றிய கட்டுரைகளையும், அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் வரவேற்கிறது. படைப்பாளிகளின் மீதான விமர்சனங்களை வெளியிடுவதற்கில்லை என்று ஒரு இதழில் (இரண்டாவது ஆண்டின் முதல் இதழில் ) அறிவித்தது.

10ஆவது இதழ் ( சனவரி 1983) ஒரு சிறப்பு வெளியீடாக வெளியானது. திருச்சியில் 1982 அக்டோபரில் 'இலக்கு கலாசார இயக்கத்தின் திருச்சிக் குழு' இருநாள் கருத்தரங்கை நடத்தியது. சினிமாவும் நமது கலாசாரமும் எனும் தலைப்பில் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். அக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த இதழ் வெளியானது.[1]

அதன்பிறகு இந்த இதழ் வெளியானதாக தெரியவில்லை.

குறிப்புகள்

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 152–154. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://tamilar.wiki/index.php?title=மானுடம்‌_(இதழ்)&oldid=17685" இருந்து மீள்விக்கப்பட்டது