மாநிலம்
மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ The Australian National Dictionary: Fourth Edition, pg 1395. (2004) Canberra. ISBN 978-0-19-551771-2
- ↑ Crawford, J. (2006). The Creation of States in International Law. Oxford, Clarendon Press.
- ↑ Daniel, Kate; Special Broadcasting Service Corporation (2008). SBS World Guide: The Complete Fact File on Every Country, 16th ed. Prahran, Victoria, Australia: Hardie Grant Books. p. 827. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74066-648-0. p26. Archived from the original on 2021-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.