மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) என்பவர் இந்திய சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்கிறது.[1][2] இவர் மெஹந்தி சர்க்கஸ் (2019) மூலம் நடிகராக அறிமுகமானார், பின்னர் த்ரில்லர் திரைப்படமான பென்குயின் (2020) திரைப்படத்தில் நடித்தார்.
தொழில்
சமையல் தொழில்
ரங்கராஜின் ஆர்வம் அசைவூட்ட துறையில் இருந்ததால் வேலைக்காக உணவுத் துறையில் ஈடுபடுவதற்கு முன்பு பொறியியல் கல்வி பயின்றார்.[2] 2002ஆம் ஆண்டில், இவர் தனது சகோதரருடன் சேர்ந்து தனது குடும்பத்தின் வணிகத்தில் ஈடுபட்டார்.[3] ரங்கராஜ் பெங்களூருக்குச் சென்று உணவகம் ஒன்றைத் தொடங்கினார்.[2] மாதம்பட்டிக்குத் திரும்பியதும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் சமையல் பொறுப்பினைக் கவனித்துக்கொண்டார்.[2] ரங்கராஜ் திரைப்படக் குழுவினருடன் பணிபுரிந்து, அவர்களுக்குத் தேவையான உணவினைப் படப்பிடிப்பு தளத்தில் வழங்கி வந்தார்.[2] இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தின் மூலம் நடிகர் கார்த்தியின் திருமணம் உட்படப் பிரபலமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் உணவுச் சேவையினை வழங்கியுள்ளார்.[2][3][4][5] மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் 2013-ல் நடைபெற்ற கோயம்புத்தூர் பேரோட்ட நிகழ்ச்சியின் உணவு ஏற்பாட்டினையும் கவனித்துக்கொண்டது.[2][6][7] ரங்கராஜ் சமையலில் கொய்யா சட்னி என்பது பெருமைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.[8]
நடிகராக
மெஹந்தி சர்க்கஸ் (2019) என்ற காதல் நாடகத்தின் மூலம் ரங்கராஜ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[3][9][10] தி டெக்கான் குரோனிக்கிள் வழங்கிய இந்த படத்தின் திரை விமர்சனத்தில், "பிரபல சமையல்காரராக இருந்து கதாநாயகனாக மாறிய மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மைக் கதாநாயகனாகப் பொருத்தமாக நடித்துள்ளார்" என்று தெரிவித்தது.[11] இவரது அடுத்த தமிழ் திகில் படம், பெங்குயின் (2020) ஆகும். இதன் இயக்குநர் ஈசுவர் கார்த்திக் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தினைப் பார்த்த பிறகு ரங்கராஜீக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார்.[1] ரங்கராஜ் பின்னர் நவம்பர் 2020-ல் மார்க் ஜோயலின் கேசினோவில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.[12]
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பங்கு | |
---|---|---|---|
2019 | மெஹந்தி சர்க்கஸ் | ஜீவா | [3] |
2020 | பென்குயின் | கௌதம் சித்தார்த் | [13] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Karthi, E. Sudharshan. "``ஏழே கேரக்டர்ஸ்... கொடைக்கானலில் 32 நாள்... பென்ச்மார்க் கீர்த்தி! - `பெண்குயின்' அப்டேட்ஸ்" [`` Seven Characters ... 32 Days in Kodaikanal ... Benchmark Keerthi! - `Penguin 'Updates]. Ananda Vikatan. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Rao, Subha J. (20 March 2014). "Madhampatty virundhu". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Jeshi, K. (13 May 2019). "Shweta Tripathi taught me method acting: Madhampatty Rangaraj on 'Mehandi Circus'". தி இந்து. Archived from the original on 26 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ Karthi, E. Sudharshan. ""கார்த்தி கல்யாணத்துக்கு கேட்டரிங், சூர்யா அண்ணனின் வாழ்த்து!" – 'மெஹந்தி சர்க்கஸ்' ரங்கராஜ்" ["Catering to Karthi wedding, brother Surya's greeting!" – 'Mehandi Circus' Rangaraj]. Ananda Vikatan. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ Rao, Subha J (3 July 2011). "A wedding to remember". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ "Over 15,000 likely to take part in Coimbatore Marathon". தி இந்து. 2 October 2018. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ "Honoured". தி இந்து. 3 November 2018. Archived from the original on 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ Rajkumar, Shanthini (17 July 2018). "'Cos now I'm living on green power: An ode to the green guava". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ "Music to our ears". தி இந்து. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 28 June 2020 – via PressReader.
- ↑ Rao, Subha (20 April 2019). "From Catering To Cinema: How Madhampatty Rangaraj Stirred His Way Into Tinseltown". Film Companion. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ Subramanian, Anupama (20 April 2019). "Mehandi Circus movie review: A breezy romantic entertainer". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 27 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ "Vani Bhojan begins shooting for Casino; shares photos from puja ceremony". Zoom. 26 November 2020 இம் மூலத்தில் இருந்து 8 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210608010847/https://www.zoomtventertainment.com/amp/tamil-cinema/article/vani-bhojan-begins-shooting-for-casino-shares-photos-from-puja-ceremony/687050.
- ↑ "Keerthy Suresh completes 'Penguin'". Sify. 5 November 2019. Archived from the original on 22 December 2019. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
வெளி இணைப்புகள்
- Madhampatty Rangaraj at IMDb
- TED talk