மாடத்தி

மாடத்தி என்பது இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[2] லீனா மணிமேகலை இயக்கியுள்ள இப்படத்தின் திரைக்கதை உரையாடலை ரஃபீக் இஸ்மாயில், மூர்த்தியும் இணைந்து எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜெஃ டோலன், அபிநந்தன் ஆகியோரும், படத்தொகுப்பை தங்கராஜும், கலை இயக்கத்தை மோகன மகேந்திரனும் மேற்கொள்ள கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படமானது ஒரு கூட்டுத் தயாரிப்புப் படமாகும்.[3]

மாடத்தி
இயக்கம்லீனா மணிமேகலை
தயாரிப்புகூட்டு முதலீடு
கதைமூர்த்தி
ரஃபீக் இஸ்மாயில்
இசைகார்த்திக் ராஜா
ஒளிப்பதிவுஜெஃ டோலன்
அபிநந்தன்
படத்தொகுப்புதங்கராஜ்
விநியோகம்நீஸ்ட்ரீம் ஓ.டி.டி தளம்
வெளியீடு2021 சூன் 24[1]
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இப்படத்தின் கதையானது புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்த ஒரு பதின்வயது பெண்ணுக்கு நடக்கும் பாலியல் வண்புணர்வை மையமாக கொண்டது.[4]

நடிகர்கள்

  • அஜ்மினா காசிம் யோசனாவாக
  • செம்மலர் அன்னம் யோன்னாவின் தாய் வேணியாக
  • அருள்குமார் யோசனாவின் தந்தை சுடலையாக
  • புருஷோத்தமன் ஊர்தலைவராக
  • கிரிக்கெட் மூர்த்தி ஊரின் முக்கியப் பிரமுகராக

வெளியீடு

இப்படம் 2021 சூன் 24 நீஸ்ட்ரீம் (Neestreem) ஓ.டி.டி தளத்தில் வெளியாகி, விமர்சகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது.[5]

மேற்கோள்கள்

  1. https://cinema.dinamalar.com/tamil-news/97170/cinema/Kollywood/Maadathy-releasing-in-OTT.htm ஓடிடியில் வெளியாகிறது மாடத்தி, செய்தி, தினமலர் 2021 சூலை 19
  2. `காணக்கூடாத சாதி'யும் பெண் தெய்வமும்... லீனா மணிமேகலையின் `மாடத்தி' பேசும் அரசியல் என்ன?, சுகுணா திவாகர், ஆனந்த விகடன், 2020 அக்டோபர் 7
  3. பவித்ரா (17 மே 2019). "தணிக்கைத் துறை ஒரு மூடர் கூடம்". செவ்வி (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27149708.ece. பார்த்த நாள்: 22 மே 2019. 
  4. "லீனாவின் மாடத்தி". செய்தி (இந்து தமிழ்). https://www.hindutamil.in/news/literature/171869-.html. பார்த்த நாள்: 16 சூலை 2019. 
  5. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/688473-ott-world-1.html எஸ். எஸ். லெனின், ஓடிடி உலகம்: திரும்பிப் பார்க்கவைத்த 2 படங்கள், கட்டுரை, இந்து தமிழ் 2021, சூலை, 2

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாடத்தி&oldid=36436" இருந்து மீள்விக்கப்பட்டது