மாசியப்பிட்டி
மாசியப்பிட்டி அல்லது மாகியப்பிட்டி எனப்படுவது, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] கட்டுவன்-மல்லாகம்-சங்கானை வீதியில் அமைந்துள்ள இந்த ஊர் மல்லாகம் சந்தியிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரில் இருந்து காங்கேசந்துறை வீதி வழியாக இவ்வூரின் தொலைவு 15.6 கிலோமீட்டர். மாசியப்பிட்டிக்கு வடக்கில் பெரியவிளான், அளவெட்டி ஆகிய ஊர்களும், தெற்கிலும் மேற்கிலும் சண்டிலிப்பாயும், கிழக்கில் கந்தரோடையும் அமைந்துள்ளது.
நிறுவனங்கள்
இவ்வூரில் மாசியப்பிட்டி சிவன் கோயில்,[2] மாசியப்பிட்டி அங்கணாக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் என்பன இவ்வூரில் அமைந்துள்ளன. அம்மன் கோயிலில், மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் உண்டு.[3]
மேற்கோள்கள்
- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.
- ↑ யாழ்/ சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி சிவன் கோவில் - நூலகம் இணையத்தளம்
- ↑ யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் - நூலகம் இணையத்தளம்