மஸீதா புன்னியாமீன்

எம். எச். எஸ். மஸீதா (மஸீதா புன்னியாமீன்) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர். இலங்கையின் தென்மாகாணத்தில் காலியைப் பிறப்பிடமாகவும், மத்தியமாகாணத்தில் கண்டி உடத்தலவின்னையை வாழ்விடமாகவும் கொண்டவர். பல இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ள இவர், இலக்கியத்தில் கட்டுரை, சிறுகதை, கவிதை என பல்வேறு துறைகளில் பங்களிப்பினை நல்கி வருகின்றார். இவரின் பிரபலமான நூல்களில் ‘மூடுதிரை’ சிறுகதைத் தொகுதி ஈண்டு குறிப்பிடத்தக்கது.

மஸீதா புன்னியாமீன்
Mazeedakalai.jpg
பிறப்பு எம்.எச்.எஸ் மஸீதா
பணி எழுத்தாளர்,ஆசிரியை
துணைவர் பீ.எம். புன்னியாமீன்
பிள்ளைகள் சஜீர் அஹமட், பாத்திமா சம்ஹா

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில் தென்மாகாணம் காலி மாவட்டத்தில் கட்டுகொடை எனும் இடத்தைச் சேர்ந்த முஹம்மட் ஹம்ஸா, ஜெஸீமா தம்பதியினரின் புதல்வியான இவர் தனது ஆரம்பக் கல்வியை கட்டுகொடை உஸ்வதுல் ஹஸனா வித்தியாலயம், காலி மல்ஹா ரசூலியா தேசிய பாடசாலை ஆகியவற்றில் பெற்றார். கற்கும் காலத்திலிருந்தே கவிதை, சிறுகதை என எழுதிவரும் இவர், மாணவியாக இருக்கும்போதே மாவட்ட ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை பெற்றுள்ளார். இவர் 'உந்துசக்தி' விஞ்ஞான சஞ்சிகையின் ஆசிரியையுமாவார்.

எழுதிய சில நூல்கள்

சிறுகதை நூல்கள்

கவிதை நூல்கள்

  • இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை (2000)

இந்நூல் கிழக்கிலங்கையைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயாவுடன் இணைந்து எழுதியது.

  • நல்லவனாவேன். சிறுவர் பாடல் நூல் (2010) ISBN 978-955-8913-50-4 calling template requires template_name parameter

பாடவழிகாட்டி நூல்கள்

  • விஞ்ஞான வினாச்சரம் (2006)- ISBN 955-8913-54-5
  • தனது கணவர் கலாபூசணம் பீ. எம். புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 93 நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற பரிசில்கள்

  • 1980ம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் தேசிய ஹிஜ்ரா கவுன்சில் அரசுடன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் பெற்று ரூபா 10,000 பணப்பரிசினைப் பெற்றார்.
  • தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் ஆகியன அகில இலங்கை ரீதியில் நடத்திய பல போட்டிகளில் கலந்துகொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் 12முறை பரிசில்களை பெற்றுள்ளார்.
  • 2008ம் ஆண்டில் கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கதிறன் போட்டியில் இவரின் சிறுகதை 2வது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

பெற்ற விருதுகள்

  • மலையக கலை இலக்கிய பேரவையின் ‘ரத்னதீப’ விருது - 2001 +
  • பாத்ததும்பர பிரதேச செயலாளர் பிரிவு - ரெபாஹ் சமுர்த்தி செயலணியினால் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ‘திரிய காந்தா’ (ஊக்கமிகு பெண்) விருது – 2004
  • 'சுடர் ஒளி' தேசிய பத்திரிகையின் ‘கல்விச் சுடர்’ விருது - 2009

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மஸீதா_புன்னியாமீன்&oldid=15220" இருந்து மீள்விக்கப்பட்டது