மலேசியா தமிழ் அறவாரியம்
மலேசியத் தமிழ்க் கல்வி ஆய்வு மேம்பாட்டு அறவாரியம் (தமிழ் அறவாரியம்) (Tamil Fountation) மலேசியத் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக, மனோகரன் மாரிமுத்து, அ. சிவநேசன், பசுபதி சிதம்பரம், கா. ஆறுமுகம் போன்றவர்களை உள்ளடக்கிய குழுவினால் 2003-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
நிறுவனர்கள் | மலேசியத் தமிழ்ச் சமுதாய ஆர்வலர்கள் |
---|---|
வகை | இலாப நோக்கம் இல்லாத அமைப்பு |
நிறுவப்பட்டது | 2003 |
தலைமையகம் | கோலாலம்பூர் மலேசியா |
தோற்றம் | கோலாலம்பூர் |
வேலைசெய்வோர் | பசுபதி சிதம்பரம் திரவியம் மருதை இளஞ்செழியன் அ.ராகவன் கி.சந்திரசேகரன் சி.கனேசுவரன் சு.நவராஜன் கோ.லோகநாதன் பூ.சுப்ரமணியம் |
சேவை புரியும் பகுதி | மலேசிய மாநிலங்கள் |
Focus | மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது |
வழிமுறை | நேரடிப் பயிற்சிகள் |
வருமானம் | மலேசிய அரசு வரிவிலக்கு |
சொந்தக்காரர் | Tamil Foundation |
Motto | கல்வியின் வழி சமுதாய மேம்பாடு |
இணையத்தளம் | [1] |
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்வழித் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 150-க்கும் மேற்பட்டவை அரசு பள்ளிகளாகவும் மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாகவும் இருந்தாலும், இப்பள்ளிகள் போதுமான வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகள் தத்தலித்துக்கொண்டிருந்தன. பள்ளி ஆசிரியர்களில் பலர் ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களாக இருந்தனர். தரமான புறப்பாட நடவடிக்கைகளும் எட்டாக் கனியாக இருந்தது. இந்நிலையை மாற்றி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் தமிழ் அறவாரியம்.
சமுதாயப் பயிர்களைத் தாங்கி நிற்கும் விளை நிலங்களான தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, அந்தப் பள்ளிகளுக்குச் சரியான நிபுணத்துவ அடிப்படையில் வழி அமைத்துக் கொடுப்பதே தமிழ் அறவாரியத்தின் தலையாயக் கொள்கையாகும்.
அத்துடன், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, தமிழ் அறவாரிய உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியை முக்கிய இலக்காகக் கொண்டு பல்வேறு மறுமலர்ச்சி நடவடிக்கைகளை இந்த அறவாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு 2003-ம் ஆண்டு அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
மலேசியாவில் தமிழ்க் கல்வி, தமிழ் ஆய்வு, தமிழ் மொழி மேம்பாட்டுத் திட்டங்களில் முன்மாதிரியாக மலேசியா தமிழ் அறவாரியம் திகழ்கின்றது. தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தலைமையாசிரியர் மன்றங்கள், பள்ளி நிர்வாகங்கள், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெரிதும் நம்பி இந்தத் தமிழ் அறவாரியம் செயல் பட்டு வருகின்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பாக தயாரிக்கப்பட்ட செயல் திட்டங்களை செயல் படுத்தி, தமிழ் பள்ளி மாணவர்களை வளப்படுத்துவதே தமிழ் அறவாரியத்தின் பிரதான நோக்கமாகும்.
மலேசிய தேசிய அளவிலான அறிவியல் விழா 2011
மலேசிய தேசிய அளவிலான அறிவியல் விழா 2011 ஜூன் 25 – 26 திகதிகளில் சிலாங்கூர், பாங்கி, ஜெர்மன் மலேசிய கல்லூரியில் (German Malaysian Institute) சிறப்பாக நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் மொத்தம் 60 தமிழ்ப்பள்ளிகள் இவ்விழாவில பங்கேற்றன.
தமிழ் அறவாரியம், ம.இ.கா புத்ரா பிரிவு, மலேசியத் தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடைபெற்ற இந்த விழாவில் ஜொகூர் லானர்டோன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது.
இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2011
கோலாலம்பூர், பங்சார் தேசிய மின்சார வாரிய மண்டபத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அளவிலான அறிவியல் விழாவில் நடைபெற்றது. இதில் சிலாங்கூர் மாநில அளவில் டெங்கில் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அளவில் சன் பெங் தமிழ்ப்பள்ளியும் முதலிடங்களைப் பெற்று வாகை சூடின.
தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டிலும் இதர சில அமைப்புகளின் ஆதரவிலும் நடைபெற்ற இந்த விழாவில் சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று தங்கள் அறிவியல் திறன்களை வெளிப்படுத்தினர்.
2007 ஆம் ஆண்டு அறிவியல் விழா
ஐந்தாவது வருடமாக தமிழ் அறவாரியத்தால் நடத்தப்படும் இவ்விழா, மலேசிய மாணவர்களிடையே அறிவியல் ஆற்றலையும், அறிவியல் விருப்பத்தையும் மேலும் வளர்க்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் திறனில் மேம்பாடும் காணப் படுகின்றது.
தமிழ் அறவாரியம் 2007 ஆம் ஆண்டு அறிவியல் விழாவினைத் தொடங்கியது. அதன் தலையாய நோக்கத்தில் அந்த விழா ஒரு முக்கியமான நிகழ்வாகும். அறிவியல் சிந்தனையைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் சரியான முறையில் சேர்த்தால் அவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு சான்று அந்த அறிவியல் விழா.
கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் அறவாரியம் கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், பகாங், பினாங்கு மாநிலங்களில் அறிவியல் விழாவை நடத்தியது. தேசிய ரீதியில், மொத்தம் 6 மாநிலங்களில், 211 குழுக்கள் பங்கெடுத்தன. அந்த அறிவியல் விழாவில் சிலாங்கூர் மாநிலத்தின் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது.
தமிழ் அறவாரியச் செயற்குழு
- தலைவர் : பசுபதி சிதம்பரம்
- துணைத்தலைவர் : திரவியம் மருதை
- உதவித்தலைவர் : இளஞ்செழியன் வேணுகோபால்
- உதவித்தலைவர் : ராகவன் அண்ணாமலை
- உதவித்தலைவர் : சந்திரசேகரன் கிருஷ்ணன்
- செயலாளர் : கனேசுவரன் சின்னக்கலை
- துணைச்செயலாளர் : நவராஜன் சுப்ரமணியம்
- பொருளாளர் : லோகநாதன் கோவிந்தசாமி
- துணைப்பொருளாளர் : சுப்ரமணியம் பூமாலி
செயற்குழு உறுப்பினர்கள்
- மன்னர் மன்னன் மருதை
- கருணாகரன் சுப்ரமணியம்
- ஆறுமுகம் காளிமுத்து
- உதயசூரியன் காளிமுத்து
- அன்பழகன் முருகன்
- செல்வஜோதிபிள்ளை ராமலிங்கம்
- எஸ். திருநாவுக்கரசு
- பொன் இரங்கன் மருதை
- நெடுஞ்செழியன் முனுசாமி
- வி.கே. ரகு
- மனோகரன் மாரிமுத்து
- டாக்டர் ஜெயராஜ் செல்வராஜ்
- ஜீவி காத்தையா
- குமாரி. உஷாராணி சற்குணவேலு
- வரதராஜன் அண்ணாமலை
- கென்னடி சோலமன்
- டாக்டர் முனியாண்டி நரசிம்மன்
- டாக்டர் பாலசுப்ரமணியம்
- டாக்டர் ஜெயசீலன் மாரிமுத்து
உள்ளகக் கணக்காய்வாளர்கள்
- என். சுப்ரமணியம்
- திருமதி. தங்கேஸ்சுவரி
மேற்கோள்
- ↑ Tamil Foundation தமிழ் அறவாரியம்