மலாயா நண்பன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலாயா நண்பன் சிங்கப்பூரிலிருந்து 1943ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய நாளிதழாகும்.
நிர்வாக இயக்குநர்
- ஹாஜி நெ. முகம்மது இப்ராஹிம்.
இவர் சிங்கப்பூரில் துணிக்கடை நடத்திய ஒருவராவார்.
ஆசிரியர்
- அறிஞர் கரீம் கனி
இதன் ஆசிரியர் சூலை 30, 1946 இதழில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"இங்கு ஒரு பத்திரிகாலயம் தொடங்குவதற்குரிய முயற்சிகளை ஆரம்பித்தோம். தென்னந்திய அச்சக நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பையும், மலாயா நண்பன் ஆசிரியர் பதவியையும் எற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது. புதியதை உண்டு பண்ணுவதைவிட இருப்பதை முதலில் சீர்படுத்துவது சாலச்சிறந்தது என்பது நமது கொள்கை. ஆகையால், இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம்".
வெளியீடு
- தென்னிந்திய அச்சகம்.
இந்நிறுவனம் பின்பு முஸ்லிம் வெளியீட்டகம் என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.
இலவச அனுபந்தம்
மலாயா நண்பன் அவ்வப்போது சில இலவச அனுபந்தங்களை வெளியிட்டுள்ளது.
இறுதி இதழ்
இப்பத்திரிகையின் இறுதி இதழ் 1968ல் வெளிவந்தது.