மறுமுகம் (திரைப்படம்)
மறுமுகம் 2014 மார்ச்சில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இதை கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்[2]. அனுப், டேனியல் பாலாஜி, பிரீத்தி தாசு போன்றோர் நடித்துள்ளனர்.
மறுமுகம் | |
---|---|
மறுமுகம் | |
இயக்கம் | கமல் சுப்ரமணியம் |
தயாரிப்பு | சன்சய் டங்கி[1] |
கதை | கமல் சுப்ரமணியம் |
இசை | அகத்தியா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கனகராசு |
படத்தொகுப்பு | டான் மெக்சு |
கலையகம் | என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிட்டட் நிறுவனம் |
வெளியீடு | மார்ச்சு, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
பெற்றோரை இழந்த டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்பப் பெண்ணைத் தேடுகிறார்.
அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களைக் கொலை செய்கிறார். இவருக்கு பிரீத்தி தாசின் குடும்பத்தைப் பிடித்து போக அவரைத் திருமணம் செய்ய நினைக்கிறார். பிரீத்தி தாசின் குடும்பமும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. ஆனால் பிரீத்தி தாசு அனுப்பைப் காதலித்து வருகிறார்.
இந்த உண்மையை டேனியல் பாலாஜியிடம் சொல்லிவிட்டு காதலனோடு வீட்டை விட்டு ஓட முடிவெடுக்கிறார். இதைத் தடுக்கவேண்டும் என முடிவெடுத்த டேனியல் பாலாஜி, தன்னுடைய சிந்தனையால் பிரீத்தியின் செல்போனில் உள்ள தொலைபேசி எண்களை மாற்றி பதிவு செய்து விடுகிறார். இதை அறியாமல் காதலன் அனுப்பிற்காக காத்திருக்கும் பிரீத்தி, அனுப் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் டேனியல் பாலாஜி வீட்டிற்கு செல்கிறார். அங்கு டேனியல் பாலாஜியின் சுயரூபத்தை தெரிந்து கொள்கிறார்.
இறுதியில் டேனியல் பாலாஜியிடம் இருந்து தப்பித்து காதலன் அனுப்பிடம் சேர்ந்தாரா என்பதைத் திகிலுடன் இயக்குநர் சொல்லியுள்ளார்.