மயேச்சுவரம்

மயேச்சுவர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் மயேச்சுவரம். யாப்பருங்கல விருத்தி இவரது பெயரை மயேச்சுரர் என்று குறிப்பிடுகிறது. இது மறைந்தபோன தமிழ்நூல்களில் ஒன்று. யாப்பருங்கலவிருத்தி உரையிலிருந்து 33 நூற்பாக்களும், பேராசிரியர் தொல்காப்பிய உரையிலிருந்து 24 நூற்பாக்களும் திரட்டப்பட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூற்பாக்கள் யாப்பு அமைப்பைப்பற்றிக் கூறுகின்றன.

இந்தூல் குறிப்பிடும் செய்திகளில் சில:

ஒருசீர் அடி முழுவதும் வருவது இரட்டைத் தொடை (2-9)

அந்தாதித் தொடை பற்றிக் குறிப்பிடும் முதல்-நூல் எனத் தெரிகிறது (2-20) பதிற்றுப்பத்து சங்ககாலத் தொகுப்புநூல் பதிற்றுப்பத்தில் நாலாம்பத்துப் பாடல்களில் அந்தாதித்தொடை காணப்படுகிறது என்பது இங்கு நுனைவுகூரத் தக்கது.

நால்வகைப் பாடல்களில் கலிப்பாவுக்கு மட்டும் அதன் உறுப்புகளுக்கு அடி-வரையறை உண்டு. ஏனைய மூன்று பாடல்களுக்கும் அடி-வரையறை இல்லை

நிலைமண்டிலம் என்னும் ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் அளவு ஒத்த நாற்சீர் அடிகளைக் கொண்டிருக்கும்

"https://tamilar.wiki/index.php?title=மயேச்சுவரம்&oldid=13343" இருந்து மீள்விக்கப்பட்டது