மப்றூக்

மப்றூக் (U. L. Mabrook) இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மப்றூக் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் பிறந்தவர். கொழும்பில் இருந்து வெளிவரும் நாளிதழ் வீரகேசரி பத்திகையில் 1998 இல் ஓர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். பின்னர், 1999 ஆம் ஆண்டு இலங்கையின் தனியார் வானொலியான 'சூரியன் எப். எம்' இல் இணைந்து, 10 ஆண்டு காலம் பணியாற்றினார். இதன் போது அவர் அந்த வானொலியில் 'நேற்றைய காற்று' எனும் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தார்.

இடையில் சிலகாலம், இவர் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலும் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். தற்போது இவர் - தொலைக்காட்சி ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

எழுத்தாளராக

இவரின் 'தடைசெய்யப்பட்ட கவிதை' எனும் கவிதை நூல் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 2008 இல் இவர் எழுதிய 'சின்னா' எனும் சிறுவர் கதை நூல் வெளியானது. பத்திரிகைகள் மற்றும் இணையங்களுக்கு தொடராக அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

"https://tamilar.wiki/index.php?title=மப்றூக்&oldid=10176" இருந்து மீள்விக்கப்பட்டது