மன்னார் அமுதன்
மன்னார் அமுதன் |
---|
மன்னார் அமுதன் (Mannar Amuthan) அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் சோசப்பு அமுதன் இடானியல் அல்லது ஜோசப் அமுதன் டானியல், தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பாக்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மன்னார் அமுதன் |
---|---|
பிறப்புபெயர் | 1984, சோசப்பு அமுதன் இடானியல் |
பிறந்ததிகதி | 1984 |
பிறந்தஇடம் | சின்னக்கடை, மன்னார், இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | அனிசிடசு பிரின்சு தேவேந்திரன் சோசப்பு, சகாயம் விராசுப்பிள்ளை சோசப்பு |
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சின்னக்கடையில், 1984ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார். இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின், 1990இல் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், விருதுநகர் மாவட்டத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
எழுதிய நூல்கள்
- விட்டு விடுதலை காண், பாத்தொகுப்பு.
- அக்குரோணி, பாத்தொகுப்பு.
விருதுகளும் பட்டங்களும்
2011இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.