மனீஷாஜித்

மனீஷாஜித் (Manishajith) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார்.[1][2][3]

தொழில்

மனீஷாஜித் கம்பீரம் (2004) படத்தின் வழியாக அறிமுகமானார். அதில் இவர் சரத் குமாரின் மகளாக நடித்தார்.[4] கிட்டத்தட்ட நாற்பது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சஞ்சீவ் நடித்த நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[5] 2015 ஆம் ஆண்டு, விந்தை படத்தில் முன்னாள் குழந்தை நட்சத்திரமான மகேந்திரனுடன் நடித்தார். அடுத்து கம்மர்கட்டு என்ற திகில் படத்தில் நடித்தார்.[6][7] டாஸ்மாக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திறப்பு விழா, மற்றும் ஜெகன் நடித்த எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல உள்ளிட்ட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பல படங்களில் நடித்தார்.[8][9] 2020 ஆம் ஆண்டில் உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்; படப்பிடிப்புத் தளத்தில் இவர் மயக்கமடைந்த நிகழ்வுக்குப் பிறகு இவருக்கு பதிலாக ஸ்ரீ கோபிகா தொடரில் நடித்தார்.[10][11] இவரது வரவிருக்கும் படங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளர் அசாருடன் கடலை போட பொண்ணு வேணும் படம் அடங்கும்.[12]

திரைப்படவியல்

  • குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாவிட்டாதவை, அனைத்தும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2004 கம்பீரம் முத்துசாமியின் மகள் குழந்தை நட்சத்திரம்
2013 நண்பர்கள் கவனத்திற்கு வெண்ணிலா
2015 கமர கட்டு
விந்தை காவ்யா
2016 இளைய தலைமுறை
2017 திறப்பு விழா ரெஹானா என குறிப்பிடப்பட்டுள்ளது
2019 வகிபா
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
2020 பிழை
அல்டி மேரி
2021 எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா கனிமொழி
தொலைக்காட்சி
ஆண்டு படம் பங்கு தொலைக்காட்சி
2020-2021 உயிரே பவித்ரா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

  1. "Karthiik plays a koothu artiste in his next film - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/karthiik-plays-a-koothu-artiste-in-his-next-film/articleshow/64064133.cms. 
  2. "Uyire: Manishajith to play Pavithra yet again - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/uyire-manishajith-to-play-pavithra-yet-again/articleshow/78127779.cms. 
  3. "வெள்ளித்திரை கை கொடுக்காததால்... சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை! யார் தெரியுமா" (in ta). https://tamil.asianetnews.com/gallery/cinema/manishajith-photo-gallery-qdb4um. 
  4. "Working with Azhar was a fun experience: Manishajith - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/working-with-azhar-was-a-fun-experience-manishajith/articleshow/69308383.cms. 
  5. "Child artist Maneeshajit turns heroine - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Child-artist-Maneeshajit-turns-heroine/articleshow/17384863.cms. 
  6. Raghavan, Nikhil (March 28, 2015). "Etcetera: Cop comedy". https://www.thehindu.com/features/cinema/etcetera-cop-comedy/article7043604.ece. 
  7. "Kamara Kattu Movie Review {1.5/5}: Critic Review of Kamara Kattu by Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kamara-kattu/movie-review/47390311.cms. 
  8. Subramanian, Anupama (May 6, 2017). "A film on Tasmac protests". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/060517/a-film-on-tasmac-protests.html. 
  9. Subramanian, Anupama (December 19, 2018). "Manishajith takes the glam route". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/191218/manishajith-takes-the-glam-route.html. 
  10. "Actress Shree Gopika replaces Manishajith in 'Uyire' - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actress-shree-gopika-replaces-manishajith-in-uyire/articleshow/76773006.cms. 
  11. "Uyire fame actress Manishajith falls unconscious on the shooting sets - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/uyire-fame-actress-manishajith-falls-unconscious-on-the-shooting-sets/articleshow/74082340.cms. 
  12. Subramanian, Anupama (May 15, 2019). "Child artiste blossoms into heroine". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/150519/child-artiste-blossoms-into-heroine.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மனீஷாஜித்&oldid=23164" இருந்து மீள்விக்கப்பட்டது