மனிஷா யாதவ்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மனிஷா யாதவ் இந்திய நாட்டு நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
மனிஷா யாதவ் | |
---|---|
பிறப்பு | பெங்களூர், கர்நாடகம், இந்தியா |
பணி | நடிகை, மாடல் |
அறியப்படுவது | வழக்கு எண் 18/9 |
திரைப்பட வாழ்க்கை
இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | வழக்கு எண் 18/9 | ஆர்த்தி | தமிழ் | பரிந்துரை-விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருது |
2012 | தூனிகா தூனிகா | மைத்ரி | தெலுங்கு | |
2013 | ஆதலால் காதல் செய்வீர் | ஸ்வேதா | தமிழ் | |
2013 | ஜன்னல் ஓரம் | கல்யாணி | தமிழ் | |
2014 | பட்டைய கெளப்பனும் பாண்டியா | கண்மணி | தமிழ் | படப்பிடிப்பில் |
2018 | ஒரு குப்பை கதை | தமிழ் |