மது சாலினி
மது சாலினி ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொகுப்பாளினியும் ஆவார். குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்பட நடிகையாவார்.
பிறப்புபெயர் | அசுமா பர்வீன் |
---|---|
பிறந்ததிகதி | 21 சூலை 1983 |
பிறந்தஇடம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை, தொகுப்பாளினி |
தொழில்
மது சாலினி பிறந்ததும் வளர்ந்ததும் ஹைதராபாத் நகரமாகும். இவரது தந்தை ஒரு தொழிலதிபர்; தாயார் ஒரு வழக்குரைஞர். தந்தை இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர், தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.[1] தாயைப் போல குச்சிப்புடி நடனம் கற்ற இவர் முதலில் விளம்பரப் படங்களில் நடித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக சிலகாலம் இருந்தார். பின் நடிகையாகத் தெலுங்கு திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்.[2]
2005 ஆம் ஆண்டு முதல் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி பரவலாகப் பேசப்பட்ட இவர் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.[1][2][3][4][5] [6][7][8] [9] [10] [11]
தெலுங்கில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பழனியப்பா கல்லூரி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை.[12] இவரது அடுத்த தமிழ்த் திரைப்படம் பதினாறு.[12] மிகவும் காலம் சென்று வெளியான இத்திரைப்படம் சுமாரான படமாக அமைந்தாலும் அதில் இவரது கதாபாத்திரமான இந்து, இவருக்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றுத் தந்தது.[13][14][15] பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.[16]
பாலிவுட் திரையுலகில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[17]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Madhu Shalini talks about Films >> Tollywood Star Interviews". Ragalahari.com. 13 June 2006. http://www.ragalahari.com/stars/interviews/159/madhushalinitalksaboutfilms.aspx. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ 2.0 2.1 "Naa Pranamkante Ekkuva – audio function – Telugu Cinema – Dr. Nirajj & Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. http://www.idlebrain.com/news/functions/audio-naapranam.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Naa Pranamkante Ekkuva – Telugu cinema Review – Dr. Neeraj, Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. 6 May 2005. http://www.idlebrain.com/movie/archive/mr-naapranamkanteekkuva.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Reviews : Movie Reviews : Naa Pranam Kante Ekkuva – Movie Review". Telugucinema.com இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120406205235/http://www.telugucinema.com/c/publish/moviereviews/naapranamkanteekkuva.php. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Naa Praanam Kante Ekkuva Review - Naa Praanam Kante Ekkuva Movie Review on fullhyd.com". Fullhyderabad.com. http://www.fullhyderabad.com/profile/movies/531/2/naa-praanam-kante-ekkuva-movie-review#tabs. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Naa Pranamkante Ekkuva – Telugu cinema Review – Dr. Neeraj, Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. 6 May 2005. http://www.idlebrain.com/movie/archive/mr-naapranamkanteekkuva.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Reviews : Movie Reviews : Naa Pranam Kante Ekkuva – Movie Review". Telugucinema.com இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120406205235/http://www.telugucinema.com/c/publish/moviereviews/naapranamkanteekkuva.php. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Naa Praanam Kante Ekkuva Review - Naa Praanam Kante Ekkuva Movie Review on fullhyd.com". Fullhyderabad.com. http://www.fullhyderabad.com/profile/movies/531/2/naa-praanam-kante-ekkuva-movie-review#tabs. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Friday Review Hyderabad / On Location : Comedy with a message". The Hindu (India). 9 March 2007 இம் மூலத்தில் இருந்து 5 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130905034517/http://www.hindu.com/fr/2007/03/09/stories/2007030900420200.htm. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811111632/http://www.hinduonnet.com/thehindu/fr/2006/04/14/stories/2006041401050200.htm.
- ↑ "State Rowdy Review – Telugu Movie Review by Kishore". Nowrunning.com. 9 December 2007 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402094229/http://www.nowrunning.com/movie/4247/telugu/state-rowdy/1428/review.htm. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ 12.0 12.1 "It's talent that matters: Madhu". Times Of India. 29 January 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Its-talent-that-matters-Madhu/articleshow/7378489.cms. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Pathinaru Tamil Movie Review – cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz. 28 January 2011 இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101231074443/http://www.indiaglitz.com/channels/tamil/review/11032.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Pathinaaru Movie Review – Tamil Movie Pathinaaru Movie Review". Behindwoods.com. http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/pathinaaru-movie-review.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Review: Pathinaru is average – Rediff.com Movies". Rediff.com. 28 January 2011. http://www.rediff.com/movies/report/south-tamil-review-pathinaru/20110128.htm. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Madhu Shalini - Tamil Cinema Actress Interview - Madhu Shalini | Bala | Vishal | Avan Ivan | Arya". Videos.behindwoods.com. http://www.videos.behindwoods.com/videos-q1-09/actor-actress-interview/madhu-shalini.html. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ "Madhu Shalini turns gangster". Times Of India. 26 August 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Madhu-Shalini-turns-gangster/articleshow/9734471.cms. பார்த்த நாள்: 21 October 2011.