மதுவின் இரகசியம்

இன்று கொரோனா என்கின்ற கொடிய வருத்தம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. பல நாடுகள் அதன் தாக்கம் தெரியாது பொருளாதாரத்தை மட்டுமே எண்ணுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. முதலில் நோய்க்கு எதிராக முழுப்பலத்துடன் போராட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதற்காகப் பொருளாதாரத்தை முற்றுமாகக் கைவிடுதல் என்று பொருளாகாது. ஆனால் சீனாவில் இத்தாலியில் நடந்தது போன்ற பேரவலங்களைத் தடுக்க வேண்டும்.

மதுவின் இரகசியம்
மதுவின் இரகசியம்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
கஸ்தூரி
உண்மையான
தலைப்பு
மதுவின் இரகசியம்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
மதுவின் இரகசியம்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது Mar 21, 2020
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 68
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9780244273842
முன்னைய
நூல்
இரண்டகன்?
அடுத்த
நூல்
கடூழியம்

இந்நூலில் மதுவின் இரகசியம், எதிரிகள், சதை உண்ணும்.. ஆகிய மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. தியாகலிங்கம் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் யாஃயாழ்ற்றன் கல்லூரியின் கனிஷ்ட பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யாஃயாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். 1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்றவர். தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழ மாணவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன. கடைசியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றி, அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில் அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்ட இவர் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்கு வந்து அங்கு வாழ்ந்துவருகின்றார்.

"https://tamilar.wiki/index.php?title=மதுவின்_இரகசியம்&oldid=16240" இருந்து மீள்விக்கப்பட்டது