மதுரை - அண்ணா பேருந்து நிலையம்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்து நிலையமாகும். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இராமனாதபுரம், சிவகங்கை திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலுள்ள ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, மாட்டுத்தாவணிப் பகுதியில் புதிதாக மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்பு இப்பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்தப் பேருந்து நிலையம் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது.

இவற்றையும் காணவும்