மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 350.
மதுரையில் ஓலைக்கடைக்கண்ணம் என்பது ஒரு பகுதி. தன் உற்றார் உறவினராகிய ஆயத்தாரோடு இப்பகுதியில் குடியேறிய புலவர் இவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
பாடல் சொல்லும் செய்தி
- திணை - காஞ்சி
- துறை - மகட்பாற்காஞ்சி
அழகிய மகள் ஒருத்தியைத் திருமணம் செய்கொள்வதற்காக வேந்தன் அவளது ஊரை முற்றுகை இட்டிருக்கிறான். அகழிக் கிடங்கைத் தூர்த்துவிட்டான். மதிலைத் தகர்த்துவிட்டான். கொல்லன் பட்டறையில் வடிக்கும் வேல் உலையில் காய்ச்சி எடுக்கப்படும்போது தோன்றுவது போல் இன்னும் வேந்தனின் கண் சிவந்துள்ளது. வளையல் பிறழும் இவளது தோளிலுள்ள சுணங்ககழகு என்ன ஆகுமோ தெரியவில்லை என ஊர்மக்கள் பேசிக்கொள்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.