மதுரவாயல் வட்டம்

மதுரவாயல் வட்டம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் அமைந்த 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மதுரவாயல் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மதுரவாயலில் இயங்குகிறது. இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் போரூர், ராமாவரம் மற்றும் மதுரவாயல் ஆகும்.

மதுரவாயல் வட்டம் 1 உள்வட்டம் மற்றும் 10 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]

மதுரவாயல் வட்டத்தின் சில பகுதிகள்

  1. மதுரவாயல்
  2. வானகரம்
  3. நொளம்பூர்
  4. போரூர்
  5. நெற்குன்றம்
  6. வளசரவாக்கம்
  7. ராமாவரம்
  8. காரம்பாக்கம்

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=மதுரவாயல்_வட்டம்&oldid=126655" இருந்து மீள்விக்கப்பட்டது