மதுமிதா எச்
மதுமிதா எச், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி திரைப்பட நடிகையாவார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துவரும் இவர், 2018 ஆம் ஆண்டு வெளியான, கன்னட புராணத் தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் என்பதில் லட்சுமி தேவியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவர் கன்னட புராணத் தொடரில் அறிமுகமானார். [2]
மதுமிதா எச் | |
---|---|
தொழில் | தொலைக்காட்சி நடிகை |
தொழில்
கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்த மதுமிதா, மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டார் சுவர்ணா என்ற கன்னட தொலைக்காட்சியில் வெளியான, கன்னட நிகழ்ச்சியான புட்மல்லி என்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியுள்ள இவர், பின்னர் ஷானி என்ற புராண தொலைக்காட்சி தொடரில் நீலிமாவாக நடித்துள்ளார். மேலும், அவர் 2018 இல் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுனா மனசை என்ற தொடரின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கு வணிகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க இவருக்கு பெரிதும் உதவியுள்ளது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் ஜீ தமிழின் பெரிய செலவுத் தொடரான பிரியாத வரம் வேண்டும் என்ற தொலைக்காட்சித் தொடரில் திருப்புமுனைப் பாத்திரத்தைப் பெற்று அறிமுகமானார். பின்னர் அவர் தெலுங்கு தொலைக்காட்சிக்கு திரும்பி, சரஸ்வதியாக நடித்த கோடலு சீரியலில் தோன்றினார். [3] 2022 ஆம் ஆண்டில், தமிழின் பிரபல தொலைக்காட்சி தொடரான எதிர்நீச்சல் என்பதில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் எல்லாரின் வரவேற்பையும் பெற்றுள்ளார். [4] [5]
பெரும்பாலும் புராண தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், தற்போது, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்துவதற்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே பயணம் செய்து வருகிறார்.
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | பாத்திரங்கள் | மொழி | சேனல் |
---|---|---|---|---|
2018-2019 | ஜெய் ஹனும் | லட்சுமி | கன்னடம் | உதயா டி.வி |
2018-2020 | மனசுனா மனசை | பவித்ரா | தெலுங்கு | ஜீ தெலுங்கு |
2019-2020 | பிரியாத வரம் வேண்டும் | துர்கா / அமராவதி | தமிழ் | ஜீ தமிழ் |
2019-2022 | எண்.1 கோடலு | சரஸ்வதி | தெலுங்கு | ஜீ தெலுங்கு |
2022-தற்போது | எதிர்நீச்சல் | ஜனனி சக்திவேல் | தமிழ் | சன் டி.வி |
மேற்கோள்கள்
- ↑ "മധുമിത | Madhumitha H". https://www.manoramaonline.com/web-stories/movies/2022/07/20/actress-madhumitha-h-engaging-pictures.html.
- ↑ "Madhumitha H Is Making Heads Turn With Her Fashion Game" (in en). https://www.news18.com/news/movies/madhumitha-h-is-making-heads-turn-with-her-fashion-game-5730679.html.
- ↑ "Jai Dhanush and Madhumita starrer 'No.1 Kodalu' completes 200 episodes" (in en). 2022-09-19. https://timesofindia.indiatimes.com/tv/news/telugu/jai-dhanush-and-madhumita-starrer-no-1-kodalu-completes-200-episodes/articleshow/78805093.cms.
- ↑ "Thiruselvam directed TV show ‘Ethir Neechal’ to launch soon" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/thiruselvam-directed-tv-show-ethir-neechal-to-launch-soon/articleshow/89298888.cms.
- ↑ "ETimes TV's poll results: Netizens select Ethirneechal as their favourite daily soap; a look at the other TV shows on the list" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/etimes-tvs-poll-results-netizens-select-ethirneechal-as-their-favourite-daily-soap-a-look-at-the-other-tv-shows-on-the-list/articleshow/98959209.cms.