மதராசபட்டினம் (திரைப்படம்)
மதராசபட்டினம் என்பது 2010ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை விஜய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன், நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.
மதராசபட்டினம் | |
---|---|
இயக்கம் | விஜய் |
இசை | ஜி.வி.பிரகாஷ் |
நடிப்பு | ஆர்யா ஏமி ஜாக்ஸன் நாசர் கொச்சி ஹனீஃபா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோனி கோன்சால்வேஸ் |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ்(இந்தியா) அய்ங்கரன் இன்டர்நேஷனல் (உலகளாவிய) |
வெளியீடு | சூலை 9, 2010 |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹28 கோடி |
கதைச் சுருக்கம்
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.
இந்தியா சுதந்திரம் பெறும் சமயத்தில் சென்னை ஆளுநராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு கழுதைக்குட்டியைக் காப்பாற்றுவதைக் காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.
நடிகர்கள்
- ஆர்யா இளம்பரிதி (அல்லது) பரிதி என
- ஏமி சாக்சன் ஆமி வில்கின்சன்
- நாசர் - அய்யாகண்ணு
- கொச்சி ஹனீஃபா - நம்பி
- லிசா லாசரஸ் கேத்தரின்
- அலக்சு ஓ'நெல் -ராபர்ட் எல்லிஸ்
- எம். ஆர். கிஷோர் குமார் - ரெங்கன்
- கபீராக உமர் லத்தீப்
- கர்ணனாக என்.எல். சீனிவாசன்
- சதீஸ் - பச்சை
- எம். எசு. பாசுகர் - வேங்கப்பன்
- பாலா சிங் துரைசாமி
- பாலாஜி வேணுகோபால் வீரசேகர முரளி
- லோலு சபா ஜீவா முரளியின் உதவியாளர்
- இளங்கோ குமரவேல் - டாக்ஸி ஓட்டுனர்
- லீமா பாபு - செல்வி
- டி. எம். கார்த்திக் - பெயிண்டர் என
- ஜார்ஜ் மரியன் ஆங்கில ஆசிரியராக
- அப்புக்குட்டி - சோம்பேரி மனிதன்
- அஜயன்பாலா - சென்னை மத்திய தொடருந்து நிலையம் - நிலைய தலைவர்
- சம்பத் ராம் - காவல் அதிகாரி
- நீலு நஸ்ரீன்
- ஆளுநராக ஜாக் ஜேம்ஸ்
- ஆளுநரின் மனைவியாக லவ்டே ஸ்மித்
- ரெவரெண்ட் எம். ஸ்மித் ஆக மைக் பாரிஷ்
- பிரித்தானிய அதிகாரியாக மாத்தியூ பெல்லன்
இசை
மதராசபட்டினம் | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 4 ஏப்ரல் 2010 | |||
ஒலிப்பதிவு | 2009 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 33:41 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் திங்க் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
மதராசபட்டினம் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இந்த பாடல்களை 4 ஏப்ரல் 2010 அன்று கமல்ஹாசன் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் வெளியிட்டனர். பாடல்களை நா. முத்துக்குமார் எழுதினார்.
தமிழ் பாடல்கள்
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "பூக்கள் பூக்கும் தருணம்" | ஹரிணி, ரூப் குமார் ரத்தோட், ஆண்ட்ரியா ஜெரெமையா, ஜி. வி. பிரகாஷ் குமார் | 6:37 | |
2. | "வாம்மா துரையம்மா" | உதித் நாராயண், கொச்சி ஹனீஃபா, ஏமி சாக்சன் | 4:47 | |
3. | "பீல் ஆப் லவ் (Feel Of Love)" | நவீன் ஐயர், சீனு | 3:42 | |
4. | "மேகமே ஓ மேகமே" | ம. சு. விசுவநாதன், விக்ரம், நாசர், நா. முத்துக்குமார், அஜயன்பாலா | 6:05 | |
5. | "ஆருயிரே" | சோனு நிகம், சைந்தவி | 6:12 | |
6. | "காற்றிலே" | ஹரிஹரன், ஜியா | 4:45 | |
7. | "தி டான்ஸ் தீம்" | நவீன் ஐயர் | 1:33 | |
மொத்த நீளம்: |
33:41 |
1947: எ லவ் ஸ்டோரி | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 2011 |
ஒலிப்பதிவு | 2009 |
இசைப் பாணி | ஒலிச்சுவடு |
நீளம் | 33:31 |
மொழி | தெலுங்கு மொழி |
இசைத்தட்டு நிறுவனம் | ஆதித்தியா மியூசிக்கு |
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
தெலுங்கு பாடல்கள்
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மேகம்மா" | மாணிக்க விநாயகம், திப்பு | 6:02 | |
2. | "மேகம்மா" (இசைகருவிகள்) | 1:26 | ||
3. | "ஓ பிரேமா" | சோனு நிகம், சைந்தவி (பாடகி) | 6:10 | |
4. | "ஓ பிரேமா" (இசைகருவிகள்) | 3:37 | ||
5. | Untitled | ரூப் குமார் ரத்தோட், ஹரிணி | 6:40 | |
6. | "ரம்மா டோரசனி" | உதித் நாராயண் | 4:52 | |
7. | "சுவிட்ச்" | ஹரிசரண் | 4:44 | |
மொத்த நீளம்: |
33:31 |