மணிவண்ணன் கோவிந்தசாமி
மணிவண்ணன் கோவிந்தசாமி அல்லது கோ. மணிவண்ணன் (ஆங்கிலம்: Manivannan s/o Gowindasamy அல்லது G. Manivannan; மலாய்: Manivannan Gowindasamy; சீனம்: 马尼万南哥温达沙米) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2013 முதல் 2018 வரை மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் மக்களவை தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]
மாண்புமிகு மணிவண்ணன் கோவிந்தசாமி Yang Berbahagia YB Tuan Manivannan Gowindasamy மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
பிகேஆர் மத்திய தலைமைக்குழு உறுப்பினர் PKR Central Leadership Council | |
பதவியில் 2023–2025 | |
சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
முன்னவர் | மாணிக்கவாசகம் சுந்தரம் (பி.கே.ஆர் –பாக்காத்தான்) |
பின்வந்தவர் | அப்துல்லா சானி அப்துல் அமீது (பி.கே.ஆர் –பாக்காத்தான்) |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | (பி.கே.ஆர் (PKR) |
பிற அரசியல் சார்புகள் |
பாக்காத்தான்) (PKR) பாக்காத்தான் ராக்யாட் (PR) |
பணி | அரசியல்வாதி |
2013-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின் ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்றத் தொகுதியில் (Hutan Melintang State Constituency) பிகேஆர் வேட்பாளராக மணிவண்ணன் போட்டியிட்டார். ஆனால் மலேசிய இஸ்லாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party) வேட்பாளருடன் நடந்த முக்கோணப் போட்டியில் பாரிசான் நேசனல் (Barisan Nasional) வேட்பாளரிடம் அவர் தோல்வி அடைந்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "You are being redirected...". http://www.parlimen.gov.my/profile-ahli.html?uweb=dr&id=3174.
- ↑ Ho Kit Yen (28 September 2018). "Court affirms Umno's victory in 3 Perak state seats". Free Malaysia Today. https://www.freemalaysiatoday.com/category/nation/2018/09/28/court-affirms-umnos-victory-in-3-perak-state-seats/.