மணமகன் தேவை
மணமகன் தேவை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மணமகன் தேவை | |
---|---|
இயக்கம் | பி. ராமகிருஷ்ணா |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணா பரணி பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஏ. கருணாநிதி சந்திரபாபு டி. ஆர். ராமச்சந்திரன் பானுமதி ராகினி தேவிகா |
வெளியீடு | மே 17, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17075 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை கே. டி. சந்தானம், அ. மருதகாசி, தஞ்சை என். இராமையாதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[2] கானம் கிருஷ்ணையர் இயற்றிய 'வேலவரே உமைத் தேடி' என்ற பைரவி ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பி. பானுமதி அதனைப் பாடியிருந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Manamagan Thevai (1957)" (in ஆங்கிலம்). 30 மார்ச் 2017 இம் மூலத்தில் இருந்து 23 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170523110431/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/manamagan-thevai-1957/article17741536.ece.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 131.
- ↑ "Song: vElavarE umai tEDi" (in ஆங்கிலம்) இம் மூலத்தில் இருந்து 1 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180501162025/https://www.karnatik.com/c1155.shtml. பார்த்த நாள்: 19 நவம்பர் 2022.