மட சாம்பிராணி

மட சாம்பிராணி, 1938 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணனின் சீனிவாஸ் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில், எஸ். என். ரங்கநாதன் இயக்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்தில் புலியூர் துரைசாமி ஐயங்கார், பி. எஸ். ராமுலு ஐயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மட சாம்பிராணி
இயக்கம்எஸ். என். ரங்கநாதன்
தயாரிப்புஏ. நாராயணன்
சீனிவாஸ் சினிடோன்
நடிப்புபுலியூர் துரைசாமி ஐயங்கார்
பி. எஸ். ராமுடு ஐயர்
கே. வி. சுவர்ணப்பா
பி. டி. சுந்தரி
கே. கமலா
வி. பொன்னம்மாள்
விநியோகம்ஏ. எல். ஆர். எம். கம்பனி, மதராசு
வெளியீடுஏப்ரல் 8, 1938
ஓட்டம்.
நீளம்13750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

ராமுலு-சீனு என்ற இரண்டு நடிகர்கள் இத்திரைப்படத்தில் கிச்சு, பிச்சு[1] என்ற நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தனர். நகரத்தின் நாகரீக மோகத்தில் சிக்கி, இவ்விருவரும் தங்கள் பூணூல்களைக் கழற்றி எறிந்துவிடுவார்கள். இறுதியில் மீண்டும் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள். இந்த நகைச்சுவைப் படம், அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ஹனுமான் ஆண்டு மலர். 1938. 
  2. "தமிழ் சினிமா முன்னோடிகள்( 6): சிவகங்கை ஏ.நாராயணன்".
"https://tamilar.wiki/index.php?title=மட_சாம்பிராணி&oldid=36154" இருந்து மீள்விக்கப்பட்டது