மங்களன் மாஸ்டர்
மங்களன் மாஸ்டர் (Mangalan Master) என்வர் ஒரு இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் போராளியும் ஆவார். இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்காக பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஆவார்.[1] இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஆவார். பின்னர் கேணல் கருணாவைப் பின் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து அதில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.[2] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உட்கட்சி சண்டையின்போது இவர் கருணாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.[3] 2005 இல் கிளேமோர் குண்டுகள் மூலம் விடுதலைப் புலிகள் இவரை கொல்ல முயற்சி செய்தனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Mangalan Master – a TMVP candidate in the election fray", Asian Tribune, July 11, 2008
- ↑ Kamalendran, Chris (July 6, 2008), "Pillayan ready to make way for Karuna", The Sunday Times
- ↑ Pillayan gives ‘final warning’ to Karuna Daily Mirror.lk - May 28, 2007
- ↑ No Karuna camp in govt. area -SLA BBC News - March 20, 2005