ப. விஜயலட்சுமி

விஜயலட்சுமி பழனிசாமி (P. Vijayalakshmi) சங்ககிரி சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் (2011-2016) அமைச்சரும் ஆவார்.[1] இவரது உறவினரும் மற்றும் திமுகவின் வலிமையான தலைவருமான வீரபாண்டி எஸ் ஆறுமுகத்தை இத்தேர்தலில் தோற்கடித்தார். முன்னதாக, இவர் 1980, மற்றும் 1984 சட்ட மன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2001 தேர்தலில் பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் தமிழக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[2][3] 1985ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனால் காதி மற்றும் கைத்தறி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1986இல் நீக்கப்பட்ட 10 அமைச்சர்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.க தலைவர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் முன்னாள் அமைச்சர் செம்மலையுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார்.

ப. விஜயலட்சுமி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2011 -2016
தொகுதி சங்ககிரி
சமூக நலத்துறை அமைச்சர்
பதவியில்
14 மே 2001 – 12 மே 2006
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
ஜெ. ஜெயலலிதா
கைத்தறி துறை அமைச்சர்
பதவியில்
10 பிப்ரவரி 1985 – 21 அக்டோபர் 1986
முதலமைச்சர் ம. கோ. ராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2001 - 2006
தொகுதி பனமரத்துப்பட்டி
பதவியில்
1980 - 1989 (2 முறை)
தொகுதி வீரபாண்டி

மேற்கோள்கள்

 

"https://tamilar.wiki/index.php?title=ப._விஜயலட்சுமி&oldid=27818" இருந்து மீள்விக்கப்பட்டது