ப. முத்துக்குமாரசுவாமி

ப. முத்துக்குமாரசுவாமி (மார்ச் 11, 1936 - அக்டோபர் 29, 2020) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும், தமிழறிஞருமாவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை எனும் ஊரில் பிறந்தவர். தந்தை மு. பஞ்சநாதம், தாய் மாரியம்மாள். தருமபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை (புலவர்) இடைநிலைப் பட்டம் பெற்றவர். இலக்கியவளம், திருவாசகத்தேன், மெய்ப்பாட்டியல் உள்ளிட்ட 43 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "செந்தமிழ் முருகன்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

ப. முத்துக்குமாரசுவாமி
ப. முத்துக்குமாரசுவாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ப. முத்துக்குமாரசுவாமி
பிறந்ததிகதி மார்ச் 11, 1936
இறப்பு அக்டோபர் 29, 2020
அறியப்படுவது எழுத்தாளர்

இலக்கியப் பணி

1963 முதல் நூல்களை எழுதத் தொடங்கிய ப.முத்துக்குமாரசாமி இலக்கியம், சைவம், திருக்கோயில்கள், சுயமுன்னேற்றம் ஆகியவை சார்ந்து 170 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 'இலக்கியவளம்', 'திருவாசகத்தேன்', 'மெய்ப்பாட்டியல்' ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை.

மறைவு

ப முத்துக்குமாரசுவாமி அக்டோபர் 29, 2020 அன்று கோவிட் தொற்றால் சென்னையில் தன் மகள் கமலாவின் இல்லத்தில் உயிரிழந்தார்.

விருது

  • தமிழ் வளர்ச்சித் துறை விருது. (செந்தமிழ் முருகன் நூலுக்காக,(மார்ச் 11, 1936 )
  • தமிழக அரசின் மறைமலையடிகள் விருது
  • கம்போடிய தமிழ்ச்சங்க விருது

நூல்கள்

  • கவியரசர்
  • பன்முகப்பார்வையில் திருநாவுக்கரசர்
  • அங்கோர் உலகப்பெருங்கோயில்
  • காசி - இராமேசுவரம்
  • திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்
  • ஆன்மாவின் பயணங்கள்
  • உலகச் சாதனையாளர்கள் 101
  • சிவதரிசனம்
  • தென்னாட்டு சிவத்தலங்கள் - I
  • அமுதம் பருகுவோம்
  • திருவள்ளுவரும் அப்பரடிகளும்
  • நீங்களும் இராமனாகலாம்
  • சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை
  • செந்தமிழ் முருகன்
  • அம்பிகை
  • அஹிம்சையின் சுவடுகள்
  • இந்திய நாட்டின் இனிய விழாக்களும்-விரதங்களும்
  • இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்
  • கங்கைக் கரையினிலே
  • கவிஞர்களின் பார்வையில் காரிகைகள்
  • கவிதைக்களத்தில்...முப்பெருங்கவிஞர்கள்
  • சிகரம் தொடுவோம்
  • சிவன்
  • தமிழ் இலக்கிய தோற்றமும் வளர்ச்சியும்
  • தமிழ்ச்செல்வம்
  • திறனாய்வு நோக்கில் திருவாசகம்
  • தென்னாட்டு சிவத்தலங்கள் (இருபகுதிகள்)
  • தேவாரத்தில் சமுதாய சிந்தனைகள்
  • நகரக் கோயில்கள் ஒன்பது
  • நாயன்மார் கதைகள்
  • புலம்பெயர் தமிழரும் தமிழும்
  • பைந்தமிழ் பூம்பொழில்
  • வடநாட்டு சிவத்தலங்கள்
  • இந்திய வரலாற்றில் வ.உ.சி
  • காலம் எழுதிய கவிதை
  • நகரக் கோயில்கள் ஒன்பது
  • பாரதி-பாரதிதாசன்-கண்ணதாசன் ஒரு பார்வை
  • திருவள்ளுவரும் அப்பரடிகளும்
  • சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை
  • பஞ்சபூதத் தலங்கள்
  • நவக்கிரகத் திருத்தலங்கள்
  • அட்டவீரட்டத் திருத்தலங்கள்
  • முக்திதரும் தலங்கள் 13
  • அம்பிகை
  • சிவதரிசனம்
  • வேதம் கண்ட விஞ்ஞானம்
  • வடநாட்டு சிவத்தலங்கள்
  • காலத்தை வெல்லும் காலபைரவர்
  • புலம்பெயர் தமிழரும் தமிழும்
  • உலகமொழிகளில் தமிழ்

தொகுப்புகள்

  • சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு (கலைஞன் பதிப்பகம்)
  • பிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு (கலைஞன் பதிப்பகம்)

மேற்கோள்கள்

தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்திருச்சி மாவட்ட நபர்கள்

"https://tamilar.wiki/index.php?title=ப._முத்துக்குமாரசுவாமி&oldid=4959" இருந்து மீள்விக்கப்பட்டது