ப. ஆப்டீன்

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர்.

ப. ஆப்டீன்
ப. ஆப்டீன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ப. ஆப்டீன்
பிறப்புபெயர் பஹார்டீன் ஆப்டீன்
பிறந்ததிகதி (1937-11-11)11 நவம்பர் 1937
பிறந்தஇடம் நாவலப்பிட்டி
இறப்பு 9 அக்டோபர் 2015(2015-10-09) (அகவை 77)
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெளிவந்த நூல்கள்

  • இரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)
  • கருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999)
  • நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)
  • கொங்காணி (சிறுகதைத் தொகுப்பு, கொடகே வெளியீடு, 2014)

பரிசுகள், விருதுகள்

  • 1968 ஆம் ஆண்டு இலங்கை Y.M.M.A நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சாந்தமும் சகிப்பும் எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1975 ஆம் ஆண்டு பண்பாட்டு அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1980 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1987 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது இரவின் ராகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசினைப் பெற்றது.
  • 1999 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது கருக்கொண்ட மேகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.
  • 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு இவருக்கு கலாபூஷண விருது வழங்கியது.
"https://tamilar.wiki/index.php?title=ப._ஆப்டீன்&oldid=15336" இருந்து மீள்விக்கப்பட்டது