ப்ரியா (புதினம்)
ப்ரியா, சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ப்ரியா | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
வெளியிடப்பட்ட நாள் | 2010 |
ISBN | 978-81-8493-442-7 |
கதைக் கரு
ப்ரியா என்னும் நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுக்குப் பாதுகாப்பாக வக்கீல் கணேஷை அனுப்புகிறார் அவளின் கணவர் ஜனார்தன். லண்டனில் கடத்தப்படுகிறாள் ப்ரியா. ஏன் அவளைக் கடத்தினார்கள் யார் கடத்தினார்கள் கணேஷ் அதை கண்டுபிடித்து ப்ரியாவை மீட்டாரா என்று செல்லும் விறுவிறுப்பான கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- ப்ரியா
- ஜனார்தன்
- ஷா
- பரத்குமார்
- சங்கரன்
- ஹெண்டெர்சன்
- சார்லஸ் ரோவான் மற்றும் பலர்.
திரைப்படமாக
இக்கதை ப்ரியா என்ற இதே பெயரில் 1978 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.