பொ. வேல்சாமி
பொ. வேல்சாமி (பி. மே 12, 1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா, பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர்.
கல்வி
தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர் ( 1969 - 1973 ). முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய 'நிறப்பிரிகை' இதழின் ஆசிரியர் குழுவில் அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து இயங்கியவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம்.
எழுதியுள்ள நூல்கள்
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி [1]
- பொய்யும் வழுவும்
- வரலாறு எனும் கற்பிதம்
- பரதகண்ட புராதனம் (டாக்டர் கால்டுவெல் தமிழிலேயே எழுதிய வேத இதிகாசங்கள் பற்றிய விமர்சன நூலின் பதிப்பாசிரியர்)
- தொல்காப்பியம் இளம்பூரணர் உரை விளக்கம் கையெழுத்துப்படியின் பதிப்பாசிரியர் - 2023
விருது
- சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி வழங்கிய சிறந்த தமிழறிஞர் விருது
- திரு.வி.க விருது (2023)
- விகடன் நம்பிக்கை விருது (2021)
- விளக்கு இலக்கிய அமைப்பு ( அமெரிக்கா ) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் - 2022
- விஜய் டி.வி. நீயா? நானா? சிறந்த ஆளுமை விருது - 2023
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் - பொ. வேல்சாமி நேர்காணல் கண்டவர்: க.காமராசன்
- பாரதி நினைவு நூற்றாண்டு - சிறப்பு உரையரங்கம் ( https://www.youtube.com/live/xffv9lrx_Vc?feature=shared )