பொ. ஐங்கரநேசன்

பொன்னுத்துரை ஐங்கரநேசன் (Ponnudurai Ayngaranesan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், சூழலியலாளரும்[1] ஆவார்.

பொ. ஐங்கரநேசன்
P. Ayngaranesan
இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 அக்டோபர் 2013
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 அக்டோபர் 2013
தனிநபர் தகவல்
பிறப்பு 1958
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சென்னை கிறித்துவக் கல்லூரி
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.[2] ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார்.[2][3]

அரசியலில்

ஐங்கரநேசன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 22,660 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[4][5] இவர் வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7][8]

மேற்கோள்கள்

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (5 அக்டோபர் 2013). "TNA's Tussle Over Provincial Ministry Posts in North". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/36606-tnas-tussle-over-provincial-ministry-posts-in-north.html. 
  2. 2.0 2.1 "Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC". jaffnahindu.org. 24 செப். 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016215139/http://www.jaffnahindu.org/news/hindu-old-boys-p-ayngaranesan-and-b-gajatheepan-elected-to-northern-provincial-council-72.html. 
  3. "Tutorial colleges burnt down in Jaffna". தமிழ்நெட். 25 சனவரி 2011. http://map.tamilnet.com/art.html?catid=13&artid=33466. 
  4. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14. 
  5. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  6. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  7. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  8. "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734. 
"https://tamilar.wiki/index.php?title=பொ._ஐங்கரநேசன்&oldid=24301" இருந்து மீள்விக்கப்பட்டது