பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் (பிறப்பு: மே 22 1968) தமிழ்நாடு ராஜாபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்விகளை பல்வேறு பள்ளிகளில் கற்றுள்ளார். புத்தூர் பல்துறைத் தொழிற் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார்.
தொழில்நடவடிக்கை
தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் பொறியியலாளர் வேலையை விட்டுவிட்டு சிங்கையின் பிரபலத் தமிழ் வானொலியான ஒலி 96.8ல் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அதன் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.
வகித்த பதவிகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உட்கணக்காய்வாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
இவருக்கு படிப்பதும் பேசுவதும் சுகமான விடயங்கள். படித்ததை பிறரோடு பகிர்ந்து கொள்வதில் அதிக விரும்பமுடையவரும், இலட்சக்கணக்கான நேயர்களைச் சென்றடையும் மிகப் பெரிய தகவல் சாதனமான வானொலியை தனது எழுத்துப் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டார். ஆண்டின் முக்கிய தினங்களில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்துள்ளார். இவர் தயாரித்த நிகழ்ச்சிகளில் ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்ற நிகழ்ச்சி மிக முக்கியமானது. ‘இது நம்ம பூமி’ எனும் சூழல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளையும் இவர் தயாரித்தளித்து சூழல் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டியுள்ளார். இசைத்துறையிலும் நாட்டமுடையவரான இவர் கவிதை, இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகின்றார்.
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு