பொன்ராம்
பொன்ராம் (பொன்ராம் பெருமாள்) தமிழ்த்திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்[1] (2013), ரஜினி முருகன்[2] (2016) ஆகி ய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீமராஜா என்னும் படத்தினை இயக்கி வருகின்றார்.
பொன்ராம் | |
---|---|
பொன்ராம் 2017இல் | |
பணி | இயக்குநர், திரைகதை எழுத்தாளர் |
பட்டம் | திரைப்பட இயக்குநர் |
திரைப்படப்பணிகள்
2001இல்
பொன்ராம் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வெளியான முதல் படம் தோஸ்த் (2001).
2002இல்
இவர் இயக்குநர் மஜித் இயக்கிய தமிழன் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் இயக்கிய முத்தம் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
2009
மு. இராசேசு இயக்கிய சிவா மனசுல சக்தி (2009) என்னும் திரைப்படத்தில் இவர் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
2010
மு. இராசேசு இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
2012
மு. இராசேசு இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி (2012) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
2013
2013இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயகனாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இயக்குநராக 12 ஆண்டுகள் ஆனது.
2016
இவர் 2016இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடித்த ரஜினி முருகன்[3] என்னும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
2017-தற்போது வரை
பொன்ராம், 2017இல் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடிக்கும் சீமராஜா)[4]என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.
திரைப்படப்பணிகள்
ஆண்டு | படம் | பணி | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
உதவி இயக்குநர் | இணை இயக்குநர் | இயக்குநர் | ||||
2001 | தோஸ்த் | தமிழ் | ||||
2002 | தமிழன் | தமிழ் | ||||
2002 | முத்தம் | தமிழ் | ||||
2007 | திருத்தம் | தமிழ் | ||||
2009 | சிவா மனசுல சக்தி | தமிழ் | ||||
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | தமிழ் | ||||
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் | ||||
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் [5] | தமிழ் | ||||
2016 | ரஜினி முருகன்[6] | தமிழ் | ||||
2018 | சீமராஜா | தமிழ் |
சான்றுகள்
- ↑ https://tamil.filmibeat.com/movies/varutha-padatha-valibar-sangam.html
- ↑ https://cinema.vikatan.com/movie-review/57681-rajinimurugan-movie-review.html
- ↑ http://tamil.thehindu.com/cinema/cinema-others/ரஜினி-முருகன்-திரை-விமர்சனம்/article8133217.ece
- ↑ http://www.puthiyathalaimurai.com/news/cinema/41825-samantha-prabhu-completes-shooting-for-seemaraja.html
- ↑ https://cinema.vikatan.com/movie-review/41434.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://tamil.filmibeat.com/reviews/rajinimurugan-review-038448.html