பொன்மனம்
பொன்மனம் (Ponmanam) 1998 ஆம் ஆண்டு பிரபு, சுவலட்சுமி மற்றும் பிரியாராமன் நடிப்பில், எஸ். பி. இராஜ்குமார் இயக்கத்தில், பிரமீட் நடராஜன் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் தைப் பொங்கல் அன்று வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]
பொன்மனம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. இராஜ்குமார் |
தயாரிப்பு | பிரமீட் நடராஜன் |
கதை | எஸ். பி. ராஜ்குமார் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரமேஷ் காந்தி |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | பிரமிட் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | பிரமிட் பிலிம் இன்டர்நேசனல் |
வெளியீடு | 14 சனவரி 1998 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
பாடகரான ஆனந்தன் (பிரபு) தன் மனைவி மகேஸ்வரி (சுவலட்சுமி) மற்றும் மகனுடன் வசிக்கிறான். அவன் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் நாயுடு (மணிவண்ணன்). வங்கியில் பனி செய்யும் குமார் (கரண்) அவர்கள் வீட்டருகே குடிவருகிறான். பூர்ணிமாவிற்கும் (பிரியா ராமன்) ஆனந்தனுக்கும் அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் சண்டை ஏற்படுகிறது.
ஒரு நாள் பூர்ணிமா ஆனந்தனிடம் தன் சோகக்கதையைக் கூறுகிறாள். பூர்ணிமாவின் குடும்பம் இலங்கையில் வசித்தபோது நடந்த குண்டுவெடிப்பில் அவளது தாயை இழந்தவள். ஒரு தங்கையின் கால்கள் ஊனமாகிறது. மற்றொரு தங்கையின் கண்பார்வை பறிபோகிறது. அவளின் குடும்பத்திற்காக இப்போது பூர்ணிமா கஷ்டப்பட்டு பணிசெய்கிறாள். அதைக் கேட்ட ஆனந்தன் அப்போது முதல் அவளின் நண்பனாகிறான். பூர்ணிமாவோ ஆனந்தனை விரும்பத் தொடங்குகிறாள்.
மகேஸ்வரி உண்மையில் தன் மனைவி அல்ல என்ற உண்மையை தன் நண்பனாக நினைக்கும் குமாரிடம் ஆனந்தன் கூறுகிறார். இதனால் மகேஸ்வரியிடம் தன் காதலைச் சொல்கிறான் குமார்.
ஆனந்தனின் கடந்தகாலம் : ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தனின் சகோதரி தன் காதலனைத் திருமணம் செய்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். இதனால் அவனது பெற்றோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தானும் தற்கொலை செய்துகொள்ள செல்லும் ஆனந்தன், அங்கு ஆபத்திலிருக்கும் மகேஸ்வரியையும் அவளது அக்காவின் குழந்தையையும் காப்பற்றுகிறான். மகேஸ்வரியின் அக்கா கணவர் அவளது அக்காவைக் கொன்றுவிடுகிறார். அங்கிருந்து குழந்தையுடன் தப்பிவந்தவள்தான் மகேஸ்வரி என்று அறிந்துகொள்கிறான். தன் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் நண்பர்களாகவே ஒன்றாக ஒரே வீட்டில் தங்க முடிவுசெய்கின்றனர். மற்றவர்கள் தவறாக எண்ணாமல் இருக்க தாங்கள் திருமணம் செய்துகொண்டதாக பொய்யுரைக்கின்றனர்.
பூர்ணிமாவின் முதலாளி (நிழல்கள் ரவி) அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். பூர்ணிமாவின் தந்தை வேண்டிக் கேட்டுக்கொள்வதால், ஆனந்தன் பூர்ணிமாவிடம் அவளை விரும்பவில்லை என்று பொய் சொல்லுகிறான். பூர்ணிமா அவள் முதலாளியைத் திருமணம் செய்கிறாள். மகேஸ்வரி குமாரைத் திருமணம் செய்துகொள்கிறாள். மகேஸ்வரியின் அக்கா குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஆனந்தன் ஏற்றுக்கொள்கிறான்.
நடிகர்கள்
- பிரபு - ஆனந்தன்
- சுவலட்சுமி - மகேஸ்வரி
- பிரியா ராமன் - பூர்ணிமா
- கரண் - குமார்
- மணிவண்ணன் - நாயுடு
- டெல்லி கணேஷ் - பூர்ணிமாவின் தந்தை
- நிழல்கள் ரவி - பூர்ணிமாவின் முதலாளி
- சார்லி
- மயில்சாமி
- முத்துக்காளை
இசை
படத்தின் இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார். பாடலாசிரியர்கள் காமகோடியன், இளவேந்தன், அறிவுமதி மற்றும் பழனிபாரதி.[4][5]
வ.எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | அழகா அழகா | எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஏ. ராஜ்குமார், சுஜாதாமோகன் | காமகோடியன் | 4:14 |
2 | நிலவோடும் | கே. ஜே. யேசுதாஸ் | இளவேந்தன் | 4:39 |
3 | பட்டாம்பூச்சி | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் | அறிவுமதி | 4:38 |
4 | நிலவினை தொட்டு | கங்கா | பழனிபாரதி | 4:59 |
5 | வானம்பாடி | எஸ். பி. பாலசுப்ரமணியன் | 4:47 |
மேற்கோள்கள்
- ↑ "பொன்மனம்". http://www.jointscene.com/movies/kollywood/Ponmanam/7811.
- ↑ "பொன்மனம்" இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029123716/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ponmanam.
- ↑ "பொன்மனம்" இம் மூலத்தில் இருந்து 2006-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061019092836/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/ponmanam.htm.
- ↑ "பாடல்கள்". http://www.muzigle.com/album/ponmanam.
- ↑ "பாடல்கள்". http://www.jointscene.com/movies/kollywood/Raja_Kumaran/9049#songs.