பொன்னேரி
பொன்னேரி (Ponneri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பொன்னேரி நகராட்சி | |||||
அமைவிடம் | 13°20′02″N 80°11′40″E / 13.3340°N 80.1944°ECoordinates: 13°20′02″N 80°11′40″E / 13.3340°N 80.1944°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருவள்ளூர் | ||||
வட்டம் | பொன்னேரி | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] | ||||
சட்டமன்றத் தொகுதி | பொன்னேரி
- | ||||
சட்டமன்ற உறுப்பினர் |
துரை சந்திரசேகர் (இ.தே.கா) | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
42,189 (2011[update]) • 5,247/km2 (13,590/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi) • 56 மீட்டர்கள் (184 அடி) | ||||
குறியீடுகள்
|
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
பொன்னேரிப் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று பொன்னேரி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[4][5]பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
அமைவிடம்
இந்நகராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கிமீ; மேற்கில் செங்குன்றம் 22 கிமீ; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கிமீ; தெற்கில் மீஞ்சூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
15 சகிமீ பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 இந்நகராட்சி 7,842 வீடுகளும்,42,189 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கல்வி நிலையங்கள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
- ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
- ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சரசுவதி கல்வியியல் கல்லூரி
- புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
- வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் CBSC பள்ளி
- பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ponneri Population Census 2011
- ↑ "Ponneri". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)