பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில்

திருஅன்னியூர் - பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்

அமைவிடம்

இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது.
இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 22ஆவது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி

 
மூலவர் சன்னதி விமானம்
 
அம்மன் சன்னதி விமானம்

இத்தலத்திலுள்ள இறைவன் ஆபத்சகாயேசுரர், இறைவி பெரிய நாயகியம்மை.

கோயில் அமைப்பு

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாகவும், அம்மன் சன்னதிக்கு முன்பாகவும் தனித்தனியாக பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் புனுகீஸ்வரர், விநாயகர், முருகன், பெரியநாயகி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து நவக்கிரக சன்னதி உள்ளது. கோயிலின் முன்பு குளம் காணப்படுகிறது.

சிறப்புகள்

இக்கோயில் பற்றிய பதிகத்தில் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த 11 திருவிருக்குக்குறள் பாடல்கள் உள்ளன.
இக்காலத்தில் இது பொன்னூர் என வழங்கப்படுகிறது.[1]

மன்னி யூர்இறை
சென்னி யார்பிறை
அன்னி யூர்இமர்
மன்னு சோதியே [2]
இறைவன் ஆபத்சகாயேசுரர்[3]
இறைவி பெரிய நாயகியம்மை
தீர்த்தம் வருணதீர்த்தம்
விருட்சம்

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. திருஞானசம்பந்தர் தேவாரம், தலமுறைப் பதிப்பு, காவிரி வடகரை தலங்கள் வரிசை எண் 21 அடிக்குறிப்பு
  2. திருவிருக்குக் குறள் பதிகம் பாடல் 1
  3. தேவாரம்.ஆர்க் தளம்