பொதட்டூர்பேட்டை

பொதட்டூர்பேட்டை (ஆங்கிலம்: Podaturpet or Pothatturpettai ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி . பொதட்டூர்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் மற்றும் வட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் உள்ளது..அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி
இருப்பிடம்: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°16′59″N 79°29′01″E / 13.283081°N 79.483611°E / 13.283081; 79.483611Coordinates: 13°16′59″N 79°29′01″E / 13.283081°N 79.483611°E / 13.283081; 79.483611
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பள்ளிப்பட்டு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,040 (2011)

2,488/km2 (6,444/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.86 சதுர கிலோமீட்டர்கள் (3.42 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/podhaturpet

அமைவிடம்

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருவள்ளூருக்கு மேற்கே 68 கிமீ தொலைவில் உள்ளது. 23 கிமீ தொலைவில் திருத்தணி உள்ளது. நகரி 14 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கில் சோளிங்கர் 25 கிமீ மற்றும் ராணிப்பேட்டை 54 கிமீ தொலைவில் உள்ளது ஆந்திரா மாநிலம் திருப்பதி 60 கிமீ தொலைவில் உள்ளது

பேரூராட்சியின் அமைப்பு

8.86 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 116 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 4,711 வீடுகளையும், 22,040 மக்கள்தொகையையும் கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75.04 % ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]பூர்வீக குடில்கள்

1) ஐயர்(அத்வைதம்) 2) ஓசூர் வீரமுத்து மரபினர் 3) திருப்பாளி மரபினர் 4) ஏக்ரி மரபினர் 5) பழக்கடை மரபினர் 6) லிங்காயித் மரபினர்

முக்கிய தொழில்

நெசவுத்தொழில் மிக முக்கியமான தொழிலாகவும் மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்ற தொழிலாகவும் உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவையும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான மக்களால் மேற்கொள்ளப்படும் முதன்மைத் தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

மருத்துவம்

அரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அறுவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  4. Pothatturpettai Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=பொதட்டூர்பேட்டை&oldid=82037" இருந்து மீள்விக்கப்பட்டது