பேறையூர் தேவநாதசுவாமி கோயில்
பேறையூர் தேவநாதசுவாமி கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. பெருமாநல்லூர் என்றும், தேவமலை என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. உயரமான மலைப்பகுதியில் கோயில் தனியாக உள்ளது.
இறைவன்,இறைவி
குன்றைக் குடைந்து அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள இறைவன் தேவநாதர் ஆவார். இறைவி தேவநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
பெருமிழலைக் குறும்ப நாயனார் சன்னதி உள்ளது. பெரிய குடவரைப் பிள்ளையார் காணப்படுகிறார். மண்டபத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]
மற்றொரு கோயில்
இவ்வூரிலுள்ள மற்றொரு சிவன் கோயில் நாகநாத சுவாமி கோயில் ஆகும். எண்ணற்ற நாக உருவங்கள் அங்கு காணப்படுகின்றன. [1]