பேராவூரணி
பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3]
பேராவூரணி | |||||||
— தேர்வு நிலை பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 10°18′N 79°11′E / 10.3°N 79.18°ECoordinates: 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
வட்டம் | பேராவூரணி வட்டம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
22,084 (2011[update]) • 1,184/km2 (3,067/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 16 மீட்டர்கள் (52 அடி) | ||||||
குறியீடுகள்
|
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[4] இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [5]
மக்கள்தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[6]
சுற்றுலாத்தலம்
- பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தளமாக உள்ளது.
- இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
- ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
- அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
- படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
- ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
- பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
- கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [7]
- விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
- ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
- மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
- சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- ஆதனூரில் 1847 ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும்,புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.
தொகுத்தவர் V.R.ஆசிக் சொர்ணக்காடு...
தொழில்
- இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
- தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
- இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
- ↑ "Peravurani". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.