பேரறிஞர் அண்ணா விருது
பேரறிஞர் அண்ணா விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.[1]
விருது பெற்றவர்கள் பட்டியல்
வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | ஆர். எம். வீரப்பன் | 2006 |
2 | சாரதா நம்பிஆரூரன் | 2007 |
3 | அ. மறைமலையான் | 2008 |
4 | ஔவை நடராசன் | 2009 |
5 | து. ரவிக்குமார் | 2010 |
6 | இரா. செழியன் | 2011 |
7 | கே. ஆர். பி. மணிமொழியன் | 2012 |
8 | பண்ருட்டி ச. இராமச்சந்திரன் | 2013 |
9 | பேராசிரியர் கஸ்தூரி ராஜா | 2014 |
10 | முனைவர் பர்வத ரெஜினாி | 2015 |
11 | கவிஞர் கூரம் மு. துரை | 2016 |
12 | அ. சுப்ரமணியன் | 2017 |
13 | பேராசிரியர் மு. அய்க்கண் | 2018 |
14 | முனைவர் கோ.சமரசம் | 2019 |
ஆதாரம்
- தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [2]