பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர்

பெர்தா ஜின்டிக்ஸ் தாகர் (Bertha Gyndykes Dkhar) ஒரு பார்வையற்ற இந்திய கல்வியாளர் ஆவார். காசி மொழியில் பிரெயில் எழுத்து முறையை கண்டுபிடித்தவர் என்று அறியப்படுகிறார்.[1] [2] 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]

பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர்
பிறப்புசில்லாங், மேகாலயா, இந்தியா
பணிகல்வியாளார்
விருதுகள்பத்மசிறீ
குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது
வலைத்தளம்
Official web site

சுயசரிதை

இவர், மேகாலயாவின் சில்லாங்கில் [4] பார்வைக் குறைபாடுள்ள குழந்தையாகப் பிறந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் போது பார்வையை முழுமையாக இழந்தார். இதனால் தனது படிப்பைக் கைவிட வேண்டியிருந்தது. வாழ வழியில்லாமல், சந்தையில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தினார். [2] இயலாமையைக் கடப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து, பிரெயில் குறியீட்டில் ஆராய்ச்சி செய்து மேகாலயாவின் உள்ளூர் மொழியான காசியில் குறியீட்டை வடிவமைத்தார்.[1]

பார்வையற்ற குழந்தைகளுக்காக பெத்தானி சங்கத்தால் நடத்தப்படும் ஜோதி ஸ்ரோட் பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார்.[5] 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது பெற்றார். [3] 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து குழந்தைகள் நலனுக்கான தேசிய விருதையும் பெற்றார்.[6]

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. 1.0 1.1 "Tehelka". Tehelka. 13 August 2011 இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129033635/http://www.tehelka.com/inspirations-bertha-g-dkhar-52/. 
  2. 2.0 2.1 "Woman for Society". Woman for Society. 2014 இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129041306/http://womanforsociety.com/bertha-dkhar/. 
  3. 3.0 3.1 "Padma Shri". Padma Shri. 2014 இம் மூலத்தில் இருந்து 15 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  4. "Highbeam". Highbeam. 13 August 2011 இம் மூலத்தில் இருந்து 29 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150329042610/http://www.highbeam.com/doc/1P3-2420309481.html. 
  5. "Jyoti Sroat". Jyoti Sroat. 2014 இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129090013/http://jyotisroat.in/who-we-are/achievements/. 
  6. "Title unknown". 10 August 2000 இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129011922/http://www.thehindu.com/2001/08/11/stories/0211000y.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெர்தா_ஜிண்டிக்ஸ்_தாகர்&oldid=18880" இருந்து மீள்விக்கப்பட்டது