பெருவாயில் முள்ளியார்


கடம்பின் பெருவாயில் என்னும் ஊரே இந்தப் பெருவாயில்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. வெண்பாயாப்பில் அமைந்த இந்த நூலில் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டும் என்று சில ஆசாரங்கள் கூறப்படுகின்றன.

சேரநாட்டில் பார்பாரின் செல்வாக்கு மிகுந்திருந்திருந்ததைச் சேரர்கள் மீது பாடப்பட்ட பதிற்றுப்பத்து நூலில் காணமுடிகிறது. ஆசாரமும் இந்த வகையின. எனினும் இந்த நூலில் கூறப்படும் ஆசாரங்கள் வாழ்வியல் தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை.

  • "வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்துச் செய்தல் ... முந்தையோர் கண்டநெறி"
  • ஓடும் நீரிலோ, குளம் போன்ற நிலைநீரிலோ வாய் கொப்பளித்துத் துப்பக்கூடாது. நீரைக் கலத்தில் முகந்து சென்று வாய் கொப்பளித்துத் ஊறக்கூடிய தரையில் துப்பவேண்டும் \ பாடல் 35
  • தனக்கென உலை ஏற்றாது, சமைத்த உணவை வழங்கி உண்ணவேண்டும் \ பாடல் 41
  • நீருக்குள்ளே தன் முகத்தைப் பார்க்கக் கூடாது \ பாடல் 13
"https://tamilar.wiki/index.php?title=பெருவாயில்_முள்ளியார்&oldid=14168" இருந்து மீள்விக்கப்பட்டது