பெருங்கதை

குணாதித்தியர் என்பவரால் பிராகிருத மொழியின் வட்டார வழக்கு மொழியான பைசாசம் மொழியில் எழுதப்பட்ட பிரகத்கதை என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் கொங்குவேளிர் என்பவராவார். இவர் ஒரு சமணர். கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான உதயணன் என்பவனின் கதையே இது.

கதையமைப்பு

உதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, சரபம் என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் துறவு பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.

உதயணகுமார காவியம்

இதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ‌ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது.

நூற்பிரிவு

அகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன.

  1. உஞ்சைக் காண்டம்
  2. இலாவாண காண்டம்
  3. மகத காண்டம்
  4. வத்தவ காண்டம்
  5. நரவாண காண்டம்

மேலும் விளக்கம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெருங்கதை&oldid=12998" இருந்து மீள்விக்கப்பட்டது