பெரி. நீல. பழனிவேலன்

கவிமாமணி பெரி. நீல. பழனிவேலன் (பிறப்பு: ஏப்ரல் 24 1939), மலேசியாவின் சிலாங்கூர் செரம் எனும் பசுமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்றார். பின்னர் சிங்கப்பூரில் முதியோர் கல்வி நிலையத்தில் உயர்நிலை வரை கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் வணிகத்துறையில் ஈடுபட்ட இவர் பின்பு பாதுகாப்புத்துறையில் தனது பணியைத் தொடர்ந்தார்.

பெரி. நீல. பழனிவேலன்
பெரி. நீல. பழனிவேலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பெரி. நீல. பழனிவேலன்
பிறந்ததிகதி ஏப்ரல் 24 1939
பிறந்தஇடம் செரம்
சிலாங்கூர்
மலேசியா
அறியப்படுவது எழுத்தாளர்

பதவிகள்

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், துணைச் செயலாளராகவும், சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும், மாதவி இலக்கிய மன்ற செயற்குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் இலக்கியப் பகுதிச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

ஊடகத்துறையில்..

இவர் கொள்கை முழக்கம் இதழின் ஆசிரியராகவும், தமிழ் மலரின் துணையாசிரியராகவும், மலேசியாவின் ‘உரிமை' மாத இதழின் துணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் சிங்கை, மலேசிய வானொலிகளில் பகுதி நேரக் கலைஞராகவும் சேவையாற்றினார்.

இலக்கிப் பணி

1957ல் எழுத்துலகில் பிரவேசித்த இவருக்கு மாணவர் மணிமன்ற இதழ் ஆரம்பத்தில் களமமமைத்துக் கொடுத்தது. இவரது முதல் சிறுகதை ‘காணாமல் போன பாலு டாக்டர் மனோகரனான விந்தை' எனும் தலைப்பில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து பசுங்குடையார், பசுமலை, நீ.பெ. கலைச்செல்வன், நீலன், பாமலன், பசுமலையான், தமிழீட்டி போன்ற புனைப்பெயர்களிலும் எழுதலானார். இவர் சிறுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், கட்டுரை ஆகிய அனைத்துத் துறைகளிலும் அகலக் கால் பதித்து 1500க்கும் மேற்பட்ட ஆக்கங்களைத் தந்துள்ளார். இவரது படைப்புகள் மலேசியா, சிங்கப்பூர், தமிழக இலக்கிய, அரசியல், கலை ஏடுகளிலும், பல்வேறு மாநாட்டு மலர்களிலும் வெளிவந்துள்ளன.

எழுதியுள்ள நூல்கள்

  • மரபுக் கவிதை நூல்கள்
  • இருபத்தைந்து
  • நெருங்கினால் சுடும் நெருப்பு
  • தமிழனைத் தேடுகிறேன்
  • சிறுவர் பாடல் தொகுப்பு
  • செவ்வானம்
  • நாவல்கள்
  • மின்னல் கீற்று
  • செம்பருத்தி
  • அந்தரத்தில் தொங்கும் உறவு

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • அந்தரத்தில் தொங்கும் உறவு எனும் நாவலுக்கான தங்கப் பதக்கப் பரிசு
  • கவிமாமணி எனும் பட்டம்

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=பெரி._நீல._பழனிவேலன்&oldid=6036" இருந்து மீள்விக்கப்பட்டது