பெரிய போரதீவு
பெரிய போரதீவு (periya Porativu) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். மட்டக்களப்பு மாநகரின் தெற்கே படுவான்கரை எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கிராமம் போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் நிருவாகத்தில் உள்ளது.[1] பெரிய போரதீவு வடக்கே பழுகாமத்தையும் கிழக்கேயும் தெற்கேயும் மட்டக்களப்பு வாவியையும் மேற்கே முனைத்தீவையும் பட்டாபுரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பெரிய போரதீவு | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | போரதீவுப்பற்று |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,356 |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
• கோடை (பசேநே) | கோடை நேரம் (ஒசநே+6) |
பெரிய போரதீவின் மக்கள்தொகை 1,356 (2010 ஆம் ஆண்டில்) 1,356 ஆகும். இவர்களில் 661 பேர் ஆண்கள், 695 பேர் பெண்கள் ஆவர்.[1] பெரும்பான்மையானோர் தமிழர்கள் ஆவர்.
இங்குள்ள கோயில்கள்
- போரதீவு பத்திர காளி அம்மன் கோவில்
இங்குள்ள பாடசாலைகள்
- பெரிய போரதீவு பாரதி வித்தியாலயம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "போரதீவுப் பற்று பிரதேச செயலகம்" இம் மூலத்தில் இருந்து 2014-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141113012510/http://www.porativupattu.ds.gov.lk/.