பெரிய கருப்புத் தேவர்
பெரிய கருப்புத் தேவர் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் கிராமியப் பாடகர் ஆவார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூரில் பிறந்தவர். சங்கரதாசு சுவாமிகளின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரபல நடிகர் ஆவார். நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதில் வல்லவர். மண்வாசனை, கரகாட்டக்காரன், விருமாண்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது துணைவியார் அன்னம்மாள் ஆவார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவரது ஒரு மகனான விருமாண்டி திரைப்பட இணை இயக்குநராகவும், இன்னொரு மகன் கார்த்திக் கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்கள்.[1]
பெரிய கருப்புத் தேவர் | ||||||
---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1934 கருமாத்தூர், உசிலம்பட்டி, மதுரை(மா) இந்தியா | |||||
இறப்பு | செப்டம்பர் 18, 2012 சாலிகிராமம், சென்னை | |||||
|
பங்களிப்புகள்
நடிப்பு
- மண்வாசனை
- ராணுவ வீரன்
- கரகாட்டக்காரன் (1989)
- விருமாண்டி (2004)
- திருப்பாச்சி (2005)
- கிரீடம் (2007)
- ஆடுகளம் (2011)
- அரவான்
திரைப்படப் பாடல்கள்
இவர் பாடியுள்ள பாடல்கள் [2]
- கருமத்தூர் காட்டுக்குள்ளே... (விருமாண்டி)
- கொடி ஏத்தி வைப்போம்... (பிதாமகன்)
- சிவகாசி ரதியே.... (பூ)
விருதுகள்
- கலைமாமணி விருது
இறப்பு
இவர்தம் 78ஆம் வயதில், செப்டம்பர் 18, 2012 அன்று சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் மாரடைப்பால் உயிர்துறந்தார். [3]
மேற்கோள்கள்
- ↑ பழம்பெரும் நடிகர் பெரிய கருப்பு தேவர்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பெரிய கருப்புத்தேவர் பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304141036/http://www.tamilcinema.dk/songs/SongsBy.aspx?cat=singer&id=752&name=Periya%20Karuppu%20Thevar.html..
- ↑ பழம் பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர் மரணம்