பெரிய உப்போடை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெரிய உப்போடை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு 4000 இற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இது மட்டக்களப்பு வாவியின் கரையிலே உள்ளது. இங்கே புனித தெரேசா கல்லூரி என்ற பாடசாலை உள்ளது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையினால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் மிகவும் முன்னேறிய கிராமமாகும். 1990களில் இடம் பெற்ற போர்ச் சூழலினால் இங்கே வசித்து வந்த சிங்களவர்கள் இடம் பெயர்ந்து விட்டனர். இங்கே சிங்கள மகா வித்தியாலயம் என்ற பாடசாலை உள்ளது. தற்பொழுது இந்த பாடசாலையில் கல்வி நடவடிக்கை எதுவும் நடைபெறுவதில்லை.
இங்கு பிரபலமானவர்கள்
- வைத்தியர் சதுர்முகம்
- வைத்தியர் தட்சணாமூர்த்தி
- கலாபூசணம் இராமமூர்த்தி
- கலாநிதி மௌனகுரு
- சுகிர்தராஜ்