பூ. மாரி அய்யா

பூ. மாரி அய்யா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விளையாட்டுக் கல்வியியல் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். விளையாட்டு, யோகா குறித்து 35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் விளையாட்டு, யோகா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார். இவர் எழுதிய “அறிந்து கொள்ளுங்கள் - கால்பந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=பூ._மாரி_அய்யா&oldid=5128" இருந்து மீள்விக்கப்பட்டது